யாரு வந்தாலும், இதான் என்னோட ஸ்டைல்; செமி-பைனலுக்கு பக்கா பிளான் இருக்கு – சிறுவன் சிங் அசத்தல் பேட்டி!

0
2274

இதுவரை எனது திட்டம் நன்றாக அமைந்திருக்கிறது. இனிவரும் போட்டிகளிலும் அதேபோன்று திட்டம் தான் இருக்கும் என்று அசத்தலாக பேட்டி கொடுத்திருக்கிறார் அர்ஷ்தீப் சிங்.

டி20 உலகக் கோப்பை தொடரில் பும்ரா இடம்பெறாததால் இந்திய அணி பந்துவீச்சில் மிகவும் திணறும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தபோது, நாயகனாக உதயமாகினார் இளம் அர்ஷதிப் சிங். இவர் நன்றாக பந்துவீசுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்காக அபாரமாக செயல்படுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அனைவரின் கணிப்பையும் தவிடுபொடியாக்கி தற்போது அசத்தி வருகிறார்.

இதுவரை 4 போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் முன்னிலையில் இருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் குறைந்த பட்சம் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி வரும் இவருக்கு பல்வேறு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு எதிராக இவர் பந்து வீசிய விதத்தை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. பாகிஸ்தானுக்கு எதிராக முதல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.

- Advertisement -

வங்கதேச அணிக்கு எதிராக முக்கியமான கட்டத்தில் உள்ளே வந்து அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை இந்திய அணியின் பக்கம் திருப்பி, திருப்புமுனையாக அமைந்தார்.

இந்த நிலையில், வரும் போட்டிகளில் இவரது திட்டம் என்ன? தற்போது வரை செயல்பட்ட விதத்தால் மனதளவில் எப்படி உணர்கிறீர்கள்? என கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.

“நான் எனது முழு கவனத்தையும் செலுத்தி தொடர்ச்சியாக பங்களிப்பை கொடுக்க விரும்புகிறேன். இன்டர்நேஷனல் போட்டிகளில் மோசமான பந்துகளை அடிக்கடி வீசுவதை தவிர்ப்பதற்கு லைன் மற்றும் லென்த் இரண்டிலும் முழு கவனம் செலுத்தி வருகிறேன். புதிய பந்தில் மட்டுமல்லாது, பழைய பந்திலும் நன்றாக வீசுவதற்கு தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

குறிப்பிட்ட போட்டியில் விக்கெட் வீழ்த்த வேண்டுமா? அல்லது ரண்களை கட்டுப்படுத்த வேண்டுமா? என்பதை பொறுத்து எனது பந்துவீச்சில் மாற்றம் இருக்கும்.

இந்திய அணியின் வெற்றிக்கு இதுபோன்ற பங்களிப்பை கொடுத்து வருவது மனதளவில் மகிழ்ச்சியை தருகிறது. அரையிறுதி போட்டிக்கும் எனது பந்துவீச்சில் இதே திட்டம்தான் இருக்கும். லைன் மற்றும் லென்த் இரண்டும் துல்லியமாக வீசும் பட்சத்தில் பேட்ஸ்மேன்கள் திணறுவர். உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை இந்திய அணி செல்லும்.” என்றார்.