இந்த இரு இளம் வீரர்களின் ஆட்டதைப் பார்க்கையில் நான் ஆடுவது போல் இருக்கிறது – சென்னை & ஹைதராபாத் அணியைச் சேர்ந்த வீரர்களை குறிப்பிட்டுள்ள யுவராஜ் சிங்

0
264

இந்திய அணியில் விளையாடிய சிறந்த ஆல்ரவுண்டர் வீரர்கள் மத்தியில் யுவராஜ் சிங்கை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. இந்திய அணிக்கு 2007ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை டி20 தொடரிலும் 2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரிலும் மிக சிறப்பாக விளையாடிய பெருமை அவருக்கு உண்டு.ஐபிஎல் தொடரிலும் அவர் நிறைய முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அவர் தற்போது இரண்டு வீரர்களை குறிப்பிட்டு அவர்கள் விளையாடும் விதம் தன்னைப் போன்று இருக்கிறது என்றும் அவர்கள் தன்னை நினைவூட்டுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

இவர் விளையாடும் விதம் என்னைப் போன்றே இருக்கிறது

நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடி வரும் 21 வயதான அபிஷேக் ஷர்மா 11 போட்டிகளில் விளையாடி தற்போது வரை 331 ரன்கள் குவித்திருக்கிறார். இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 30.09 மற்றும் ஸ்டிரைக் ரேட் 132.4 ஆக உள்ளது.

இவரை சுட்டிக்காட்டி இவர் விளையாடும் இதுவும் அப்படியே தன்னைப் போன்று இருக்கிறது என்று கூறியுள்ளார். தன்னை நிறைய முறை இவர் நினைவூட்டுகின்றன என்றும் இவர் விளையாடும் ஷாட்கள் அனைத்தும் தன் விளையாடியதை போன்று இருக்கின்றன என்றும் கூறியுள்ளார். குறிப்பாக இவர் அடிக்கும் புல் ஷாட் மற்றும் பேக்ஃபூக் ஷாட் அடிப்பதை பார்க்கையில் நான் அவரைப் போலவே இருந்தேன் என்பதை உணர்ந்தேன் என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

இவரைப்போன்ற வீரர்களுக்கு நிறைய வாய்ப்பு வழங்க வேண்டும்

யுவராஜ் சிங் கூறிய மற்றொரு வீரர் ஷிவம் டுபே. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் ஷிவம் டுபே 9 போட்டிகளில் விளையாடி இதுவரை 279 ரன்கள் குவித்துள்ளார்.இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 34.88 மற்றும் ஸ்டிரைக் ரேட் 160.34 ஆக உள்ளது.

ஷிவம் டுபே விளையாடும் விதமும் என்னை போன்ற இருக்கிறது அவரும் என்னை நினைவூட்டுகிறார். சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் இவருக்காண வாய்ப்பு நிறைய கிடைக்கப்பெற வேண்டும். 28 வயதாகும் அவர் நீண்ட காலமாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இதுவரை எத்தனை ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருப்பார் என்று எனக்கு தெரியவில்லை.

இவரிடம் திறமை இருப்பது உங்களுக்கு தெரிய வந்தால் இவருக்கான வாய்ப்பை வழங்க வேண்டும். இவர் மட்டுமின்றி இவரை போன்ற வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுப்பதனால் மட்டுமே இவர்களுடைய ஆட்டங்கள் படிப்படியாக மெருகேறும். இவ்வாறு யுவராஜ் சிங் இவர்கள் இருவர் குறித்து பேசியிருக்கிறார்.