இவங்க ரெண்டு பேராலயும் அவரது பந்துவீச்சை ஆட முடியாது! – இலங்கை அணியின் முன்னாள் வீரர் சர்ச்சை பேட்டி!

0
1074

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான நேற்று நடந்த முதலாவது டி20 போட்டியில் இந்தியா அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது . முதலாவதாக ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரண்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 41 ரண்களும் இசான் கிசான் 37 ரன்களும் எடுத்தனர் .

இதனை அடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி பரபரப்பான ஆட்டத்தில் 160 ரன்கள் ஆட்டம் இழந்தது . அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சனக்கா 45 ரன்கள் எடுத்திருந்தார் . இந்திய அணியில் பந்துவீச்சில் அறிமுக வீரர் மாவி 22/4 விக்கெட்டுகளையும் உம்ரான் மாலிக் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் . தீபக் ஹூடா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார் .

முன்னதாக முதலில் பந்து வீசிய இலங்கை அணியில் உலகின் நம்பர் ஒன் டி20 பந்துவீச்சாளரான வணிந்து ஹசரங்கா சிறப்பாக பந்துவீசி 22 ரண்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார் . இவர் பந்து வீசிய நேரங்களில் அதிக அளவு ரன்களை விட்டுக் கொடுக்காமல் கட்டுப்பாடுடன் பந்து வீசினார். இவரது பந்துவீச்சு பற்றி வெகுவாக பாராட்டியுள்ள இலங்கை அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் பர்வேஸ் மஃரூப் இந்திய வீரர்களால் ஹசரங்காவின் பந்துவீச்சை திறம்பட ஆட முடியவில்லை என்று கூறியுள்ளார் .

இதுகுறித்து விரிவாக பேசி உள்ள அவர் சுழற் பந்து வீச்சை நன்றாக ஆடக்கூடிய சஞ்சு சாம்சன் போன்ற பேட்ஸ்மேன்களால் ஹசரங்காவின் லைன் அண்ட் லென்த் கணிக்க முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறார் . நேற்று இந்திய வீரர்கள் அவர் மோசமாக வீசிய பந்தை அடிக்க முடிந்தது . ஆனால் அவர் சரியான அளவில் வீசிய பந்தை அவர்களால் கணிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார் .

இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் சஞ்சு சாம்சன் ஹசரங்காவின் ஒரு ஓவர் ஆடினார் அவரால் ஒரு பந்தை கூட கணிக்க முடியாததை நாம் பார்க்க முடிந்தது . முதலில் ஒரு கேட்ச் தவற விடப்பட்ட நிலையில் மற்றொரு கேட்ச் மூலம் அதே ஓவரிலேயே அவர் ஆட்டம் இழந்தார் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சுழற் புந்துவீச்சை நன்றாக ஆடக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் ஆனால் நேற்று அவரும் ஹசரங்காவின் பந்துவீச்சை ஒரு நம்பிக்கையான மனநிலையுடன் ஆடவில்லை சிறிது தடுமாற்றத்துடனே ஆடினார் என்று குறிப்பிட்டிருந்தார் . ஹசரங்காவின் பந்து வீச்சில் அவருக்கு விக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்றாலும் சிறப்பாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது