“இந்த முறை டி20 உலக கோப்பை பங்களாதேஷ்க்குதான்.. காரணம் இதுதான்” – ஷாகிப் உறுதி!

0
213
Bangladesh

உலகக் கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தும், தோல்விகளை தாண்டி எப்பொழுதும் அணியை ஆதரிக்கும் உணர்வுபூர்வமான ரசிகர்களை கொண்டிருந்தும், உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பை கொண்டிருந்தோம், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக ஏமாற்றி வந்திருக்கிறது.

கடந்த 2021 மற்றும் 2022 டி20 உலகக் கோப்பை தொடர்களில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியிருக்கிறது. மேலும் 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

- Advertisement -

ஒரு பக்கம் ஆசியாவிலிருந்து ஆப்கானிஸ்தான் அணி மிகச் சிறப்பான செயல்பட்டு வளர்ந்து வரும் வேளையில், மூத்த அணியான பங்களாதேஷ் இன்னொரு பக்கத்தில் நாளுக்கு நாள் செயல்பாட்டில் தேய்ந்து வருகிறது.

இது மட்டும் இல்லாமல் பங்களாதேஷ் நாட்டில் ஐபிஎல் தொடர் போல பங்களாதேஷ் பிரிமியர் லீக் என்ற பெயரில் வருடம் தோறும் டி20 தொடரும் நடத்தப்படுகிறது. இப்படி எல்லாம் இருந்தும் பங்களாதேஷ் குறிப்பிட்ட அளவு தாக்கத்தை உலகக் கிரிக்கெட்டில் ஏற்படுத்த முடியாமல், தொடர்ச்சியாக அந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்து வருகிறது.

இந்த நிலையில் பங்களாதேஷில் நடைபெற்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்ற, பங்களாதேஷ் அணியின் மிக முக்கிய நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசன் இந்த மாதம் துவங்க உள்ள பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கு உடல் தகுதிக்கான பயிற்சிகளை தொடங்கியிருக்கிறார்.

- Advertisement -

அவர் வருகின்ற டி20 உலகக் கோப்பை தொடர் குறித்து கூறும் பொழுது “டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடக்கிறது. அங்குள்ள சூழ்நிலை பங்களாதேஷ் கிரிக்கெட் பாணிக்கு ஏற்ற ஒன்றாக இருக்கும். இதனால் எங்களுக்கு இந்த முறை ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக நாங்கள் டி20 போட்டிகளில் நன்றாக விளையாடி வருகிறோம்.

எங்களுடைய அணி சமநிலையிலும் மற்றும் நல்ல ரிதத்திலும் இருக்கிறது. எல்லா வீரர்களும் நன்றாக விளையாடுகிறார்கள். தற்பொழுது நியூசிலாந்தில் டி20 தொடரில் எங்கள் அணி நன்றாக விளையாடியிருக்கிறது. நிச்சயமாக எங்களுக்கு டி20 உலக கோப்பை தொடர்பு குறித்து நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!