இந்த டீம்தான் இந்த முறை உலக கோப்பையை வெல்லும் – பிரண்டன் மெக்கலம் அதிரடியான கணிப்பு!

0
4879
McCullum

இந்த ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துவங்கி நடைபெற இருக்கிறது. இறுதிப்போட்டி இதே மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி நடக்கிறது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் தொடரை நடத்தும் இந்தியா, கடந்த ஒருநாள் கிரிக்கெட் சாம்பியன் இங்கிலாந்து, ரன்னர் அப் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய பத்து அணிகள் பங்கு பெறுகின்றன.

- Advertisement -

இந்தத் தொடரில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதுகின்றன. லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் நான்கு இடத்தை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறுகின்றன. அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்குள் சென்று, சாம்பியன் அணி வெளியே வருகிறது.

தற்போது இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கலம், நடக்க இருக்கும் உலக கோப்பையில் எந்த அணி சிறப்பாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றும்? எந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறலாம்? என்பது குறித்தான தனது கருத்தைக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்பொழுது
“இந்தியா மிகவும் வலுவான ஒரு அணியாக இந்த உலகக் கோப்பை தொடரில் இருக்கும் என்று நான் கணிக்கிறேன். பும்ராவை நீங்கள் அணிக்குள் கொண்டு வரும்பொழுது அது எந்த அணியாக இருந்தாலும் சிறப்பானதாக மாறுகிறது. போட்டியை எப்படி வெல்ல வேண்டும்? கிடைக்கும் தருணங்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? என்று அவருக்கு மிக நன்றாகத் தெரியும். இதனால் இந்திய தரப்பு மிகவும் வலுவான ஒன்றாக இருக்கும்.

- Advertisement -

இந்தியாவுக்கு நிறைய திறமைகள் இருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு வந்து தங்களை நிரூபித்து இந்திய அணிக்கு நுழைந்து தங்களது இடத்தை அடைந்துள்ள வீரர்களை நாம் பார்த்திருக்கிறோம். எனவே தொடரின் முடிவில் இந்திய அணி இருக்கும் என்று நம்பலாம்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் அரை இறுதிக்கு யார் வருவார்கள் என்று தேர்ந்தெடுப்பது கடினமான ஒன்றாக இருக்கும். நீங்கள் உலக கோப்பையில் யார் வெற்றி பெறுவார்கள் என்று சொல்வது பெரும்பாலும் சுலபமாக இருக்கும். இப்பொழுது அதுவே கடினமாக இருக்கிறது. நான் இந்தியா உலக கோப்பையை வெல்லும் என்று நினைக்கிறேன்.

இந்தியாவுக்கு அடுத்து இங்கிலாந்துக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உலகக்கோப்பைகளில் தங்களது சிறந்த வழிகளை கண்டுபிடிக்க கூடியவர்களாக இருப்பார்கள். இந்திய நிலைமைகளில் பங்களாதேஷ் அணியும் கடினமான ஒன்றுதான்!” என்று கூறியிருக்கிறார்!