இந்த அணி ஆசியக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது – சல்மான் பட் கணிப்பு!

0
955
Salman butt

இந்திய அணி இருபத்தி ஏழாம் தேதி துவங்கும் ஆசிய கோப்பை போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணிக்கு ரன் மெஷின் விராட் கோலி வந்திருக்கிறார். மேலும் இந்திய அணி ஒரு முழு பலமான அணியாகதே களமிறங்குகிறது என்று கூறலாம். ஒரே குறை என்னவென்றால் ஜஸ்பிரித் பும்ரா அணியில் இல்லாததுதான்!

மேலும் இந்த முறை ஆசிய கோப்பையில் இந்திய அணியில் இடம் பெற முடியாமல் இருக்கின்ற வீரர்களைப் பார்த்தால் அவர்களை கொண்டே இன்னொரு தொடருக்கு அணியை அனுப்ப கூடிய அளவிற்கு சிறந்தவர்களாக இருக்கிறார்கள். இசான் கிசான், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர், அக்சர் படேல், சிகர் தவான், சுப்மன் கில், ருத்ராஜ் என்று இந்தப் பட்டியல் மிகப் பெரியது. இவர்களை கொண்ட ஒரு அணி ஆகஸ்ட் 18ஆம் தேதி போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஜிம்பாப்வே அணியுடன் முதல் போட்டியில் விளையாடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை இருப்பதால், இந்த உலக கோப்பையில் பங்கேற்கும் எல்லா அணிகளுமே அதற்கான முன் தயாரிப்புகளில் தீவிரமாய் இருக்கின்றன. நடுவில் இருக்கும் டி20 தொடர்களை உலக கோப்பைக்கு தயார் ஆவதற்காக பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றன. இதன் மூலம் ஒரு முழுமையான அணியை கண்டறிய முயற்சிக்கின்றன. இந்திய அணியின் இப்படியான முயற்சிகளில் பல வீரர்களை பரிசோதித்து இறுதியாக ஒரு அணி அமைக்கும் இறுதி நிலைக்கு வந்திருக்கிறது என்று கூறலாம்.

தற்போது துவங்க இருக்கும் ஆசிய கோப்பையை வைத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் இடதுகை பேட்ஸ்மேன் சல்மான் பட் இடம் சில முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டது. அவர் அந்த கேள்விகளுக்கு மிகவும் வெளிப்படையாக தனது பதில்களை தெரிவித்து இருக்கிறார். பாகிஸ்தான் அணி நிர்வாகத்தை விட இந்திய அணி நிர்வாகம் மிகச்சிறப்பாக தயாராக இருப்பதாகவும், இந்த உலக கோப்பையில் கலந்து கொள்ளும் எல்லா ஆண்களுமே சிறப்பாக அன்றைய நாளில் செயல்பட முடிந்தாலும், இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ள ஒரு அணியாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

இது பற்றி அவர் கூறும் பொழுது ” இந்த தொடரில் போட்டியிடும் எந்த அணிகளும் வெல்லக் கூடிய அணிகள் தான். ஆனால் இந்திய அணி தொடர்ந்து மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. அவர்களிடம் மிகப்பெரிய வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர்களிடம் பல வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சர்வதேச போட்டி அனுபவங்களையும் பெற்றவர்களாக இருக்கிறார்கள். இதனால் மக்கள் அவர்களை கோப்பையை வெல்லக்கூடிய அணியாக நினைக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இந்திய அணியை போல் பாகிஸ்தான் அணியில் பல வீரர்கள் இல்லை. பாகிஸ்தானின் பெஞ்ச் பலம் மிகக் குறைவாய் இருக்கிறது. வீரர்கள் குழுவை பாகிஸ்தான் நிர்வாகம் உருவாக்கவில்லை. பாகிஸ்தான் நிர்வாகத்தை நாங்கள் நம்பவும் இல்லை. எங்களின் இரண்டாவது அணி என்று ஒன்று எங்கேயும் விளையாட இல்லை. பாபர், ரிஸ்வான், ஜமான், ஷகீன் இவர்கள் இல்லாமல் எங்களால் விளையாடவே முடியாது. எங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் கோப்பையை வெல்லக்கூடிய இடத்தில் யார் இருக்கிறார்கள் என்று கருத்து தெரிவிக்கையில் ” குழுவில் பாகிஸ்தான் உள்ளது. அவர்களின் நாளில் அவர்களால் யாரையும் வீழ்த்த முடியும். டி20 கிரிக்கெட்டில் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அந்த ஆட்டத்தின் விதியை தீர்மானிக்கும். இந்த ஆட்டம் அன்றைய நாளை பொறுத்தது. ஆப்கானிஸ்தானும் அபாயமான அணியே. பங்களாதேஷ் சிலநேரங்களில் சிறப்பாக செயல்படுகிறது ஆனால் வழக்கமாக அப்படி இல்லை” என்றும் கூறியிருக்கிறார்!