ஷுப்மன் கில் பாக்க விராட் கோலி மாதிரி இருந்தாலும், அடிக்கிற ஷாட் விரேந்திர சேவாக் மாதிரி – முன்னாள் வீரர் கருத்து!

0
375

ஷுப்மன் கில் பேட்டிங்கில் விரேந்திர சேவாக்-இன் அதிரடி மற்றும் தைரியம் தெரிகிறது என கருத்து தெரிவித்திருக்கிறார் சஞ்சய் மஞ்ரேக்கர்.

இந்திய அணிக்கு மூன்றுவித போட்டிகளிலும் முன்னணி துவக்க வீரராக உருவாகி வரும் இளம் வீரர் ஷுப்மன் கில், சமீபத்தில் இருந்து வரும் பார்ம் இன்றியமையாதது. குறிப்பாக இந்த 2023 ஆம் ஆண்டு மூன்று மாதம் முடிவடைவதற்குள்ளேயே பல சாதனைகளை படைத்து உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.

- Advertisement -

2023 ஆம் ஆண்டில் இதுவரை ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்கள், ஒரு இரட்டை சதம் அடித்திருக்கிறார். டி20 போட்டிகளில் ஒரு சதம் அடித்திருக்கிறார். குறிப்பாக அந்த சதத்தின் மூலம் டி20 போட்டிகளில் இந்திய வீரர் மத்தியில் ஒரு இன்னிங்ஸில் அடித்த அதிக ஸ்கோரை பதிவு செய்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் களமிறங்க வாய்ப்பு கொடுக்கப்பட்டபோது, அதை அபாரமாக பயன்படுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது சதத்தை பதிவு செய்திருக்கிறார். இந்திய மண்ணில் இவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். அதுவும் இந்திய அணி இக்கட்டான சூழலில் இருந்தபோது வந்தவை.

இவரிடம் பொறுப்பும் இருக்கிறது, அதிரடியும் இருக்கிறது என்று பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில், இவரது பேட்டிங்கில் விராட் கோலியின் நிதானம் சேவாக்கின் அதிரடி மற்றும் தைரியம் இருக்கிறது என ஒப்பிட்டு பேசியுள்ளார் சஞ்சய் மஞ்ரேக்கர்.

- Advertisement -

“எனக்கு ஷுப்மன் கில்லிடம் மிகவும் பிடித்த ஒன்று அவரிடம் இருக்கும் கால் அசைவுகள். டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக முன்னோக்கி வந்து பந்துகளை எதிர்கொள்கிறார். அதேபோல் சரியான பந்துகளை முடிந்த வரை பின்னோக்கி எதிர்கொண்டு அடித்து விளையாடுகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலம் நீடிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.

குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் தவறான பந்துகளை எந்த ஒரு சூழலாக இருந்தாலும் தூக்கி அடித்து அதை பௌண்டரி அல்லது சிக்ஸர்களாக மாற்றுகிறார். இந்த அதீத நம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நேர்த்தியான மற்றும் சுத்தமான பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் ஆற்றல் நிறைந்த வீரராகவும் இருக்கிறார்.

ஷுப்மன் கில் இரட்டை சதம் அடித்தபோது, அவரிடம் சேவாக்கின் தைரியம் இருப்பதை கண்டேன். 90களில் இருக்கும்பொழுதும் சிக்ஸர் அடித்து சதத்தை பூர்த்தி செய்கிறார். 190 களில் இருக்கும் பொழுதும் சிக்ஸர் அடித்து இரட்டை சதம் பூர்த்தி செய்தார். மிகமிக சொற்பமான வீரர்களே இப்படிப்பட்ட தைரியம் கொண்டவர்கள். அந்த ஆற்றல் மற்றும் தைரியம் இரண்டும் இதற்கு முன்னர் நான் சேவாக்கிடம் பார்த்திருக்கிறேன். அது ஷுப்மன் கில்லுக்கு இருப்பது மிகவும் அரிதான பலம்.” என்று பெருமிதமாக பேசினார்.