“எவ்வளவு மோசமா விளையாடினாலும் இந்த வீரர் டீம்ல இருப்பார்.. காரணம் இதுதான்!” – மும்பை இந்தியன்ஸ் வீரர் அதிரடி பேச்சு!

0
1956
ICT

தற்பொழுது இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

மேலும் உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியாவில் விளையாடுவதால் ஆஸ்திரேலியா அணிக்கு இது மிகச் சிறந்த பயிற்சி தொடராக அமையும் என்பதில் சந்தேகம் கிடையாது.

- Advertisement -

அதே வேளையில் தென் ஆப்பிரிக்க ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தோல்வி மற்றும் முக்கிய வீரர்களின் காயம் ஆகியவற்றில் இருந்து மீண்டுகொள்ள இந்த தொடரை ஆஸ்திரேலியா பயன்படுத்தும்.

அதே சமயத்தில் ஆசிய கோப்பை தொடரை வென்று இந்திய அணி முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் அளவுக்கு ஆஸ்திரேலியா தொடர் முக்கியமில்லாத ஒன்றாக இந்திய அணிக்கு இருக்கிறது.

ஒட்டுமொத்த இந்திய அணியை பார்க்கும் பொழுதுதான் இந்த நிலைமை இருக்கிறது. ஆனால் அணிக்குள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் தங்களை நிரூபிப்பதற்கான மிக முக்கியமான தொடர் இதுவாகும்.

- Advertisement -

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் சூரியகுமார் அரைசதம் அடித்து தன்னை நிரூபித்து இருக்க, ஸ்ரேயாஸ் ஐயர் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறி வெறுப்பாக்கினார்.

இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரின் இந்திய அணி இடம் பற்றி பேசி உள்ள இந்திய மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் கூறும் பொழுது “ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு தொழில் முறை வீரர். நீண்ட நாட்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். மேலும் சில ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடுகிறார்.

நேற்றைய போட்டியில் அந்த நேரத்தில் பெரிய ரன் தேவை இல்லாத பொழுது அந்த ரன் முயற்சி தேவையற்ற ஒன்று. மேலும் அந்த ரன்னுக்கு சரியான தகவல் தொடர்பும் இல்லை. ஆனால் நீங்கள் இதிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

அவர் இதே மாதிரி மீண்டும் திரும்ப வந்திருக்கிறார். தற்பொழுது இந்திய அணி இருக்கின்ற நிலைமையில் அவர் நிச்சயம் இந்திய அணியில் தொடர்வார் என்று நான் நினைக்கிறேன். தற்போதைய இந்திய அணி நிர்வாகம் விளையாடும் வீரர்களை ஆதரிக்கிறது.

மேலும் அவரும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஒன்று இரண்டு போட்டிகள் மட்டுமே அவரது இடத்தை முடிவு செய்யப் போவது கிடையாது. இது அவர் எப்பொழுது ஒரு நல்ல இன்னிங்ஸ் விளையாட போகிறார் என்பதைப் பற்றியது. ஸ்ரேயாஸ் இந்தியாவுக்காக இதை செய்திருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!