இந்த வீரருக்கு இந்திய தேர்வாளர்கள் செய்தது துரோகம் – பாகிஸ்தான் வீரர் விளாசல்!

0
68
Saqlain mushtaq

இந்திய கிரிக்கெட் அணி ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் கூட்டணிக்கு கை மாறிய பின்பு ஒரு புதுவித தாக்குதல் பாணி கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. மாறிவரும் கிரிக்கெட்டிற்கு ஏற்ப இந்திய அணியை உருவாக்குவதில் இவர்கள் இருவரும் மிகத் திறமையாக வெளிப்படையாக செயல்பட்டு வருகிறார்கள் என்றே கூற வேண்டும்!

ரோகித் சர்மா ராகுல் டிராவிட் கூட்டணி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தற்போது இரண்டு இந்திய அணிகளை உருவாக்கும் அளவிற்கு, இளம் வீரர்களை சர்வதேச கிரிக்கெட் அனுபவத்திற்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். மேலும் மூத்த வீரர்களிடம் அணிக்கு தேவையான திறமை இருந்தால் அதையும் எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

இந்த வகையில் எடுத்துக்கொண்டால் ரோகித் சர்மா ராகுல் டிராவிட் கூட்டணி மூத்த வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் ஆர் அஸ்வின் ஆகியோருக்கு மறு வாய்ப்பு தந்து மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வந்து இந்திய கிரிக்கெட் அணியை எல்லா விதத்திலும் வலிமைப்படுத்தும் வேலையைச் செய்து வருகிறார்கள்!

குறிப்பாக ஆர் அஸ்வின் இன்று உலகின் தலைசிறந்த ஒரே ஒரு ஆப் ஸ்பின் பவுலர் என்று கூறலாம். அப்படிப்பட்ட இவருக்கு 2017 ஆம் ஆண்டு முதல் விராட்கோலி ரவிசாஸ்திரி கூட்டணி வெள்ளை பந்து கிரிக்கெட்டில் வாய்ப்பு தருவதை நிறுத்தி விட்டது. காரணம் அவர்கள் விரல் சுழற்பந்து வீச்சில் இருந்து மணிக்கட்டு சுழற்பந்து வீச்சுக்கு மாறிக் கொண்டார்கள். இதனால் ஆர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே சுருங்கி போனார். ஆனால் அவரால் எல்லாவிதமான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட முடியும் என்பதே உண்மை. ஐபிஎல் தொடர்களில் அவர் தன்னை நிரூபித்தும் இந்திய அணியில் அவருக்கு 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஆண்டு வரை வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்தநிலையில் விராட் கோலி ரவிசாஸ்திரி கூட்டணியின் கடைசி உலகக்கோப்பையான அந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ஆர் அஸ்வின் மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டார். ஆனால் அடுத்து அடுத்த எட்டு மாதங்கள் எந்த இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் இந்த நிலையில் மீண்டும் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை இருக்கும் நிலையில், அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டது. தற்போது ஆசிய கோப்பை தொடரிலும் அவர் அணியில் இடம் பிடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் உலகின் மிகச் சிறந்த முன்னாள் ஆப் ஸ்பின் பவுலர் ஆன பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சக்லைன் முஸ்தாக் ஆர் அஸ்வின் பற்றி தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அஸ்வினை பற்றி அவர் கூறும் பொழுது அஸ்வின் எந்த நேரத்திலும் சிக்கனமாய் பந்து வீசுவதில் இருந்து விக்கெட் எடுக்கும் முறைக்கு கியரை மாற்றக் கூடிய ஒரே வீரர் என்று கூறினார்.

அவர் அஸ்வின் பற்றி கூறியுள்ளதாவது ” இரண்டு வகையான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஒருவகை விக்கெட்டுகளை வீழ்த்துவது. இன்னொரு வகை சிக்கனமாய் வீசுவது. இதில் அஸ்வின் மட்டும்தான் ஒரே நேரத்தில் இரண்டையும் செய்யக்கூடிய ஒரே பந்துவீச்சாளர். அவரால் தேவைக்குத் தகுந்தபடி தனது கியரை மாற்ற முடியும். இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் தேர்வாளர்கள் அவருக்கு செய்தது அநியாயம். தற்பொழுது ரோகித்சர்மா ராகுல் டிராவிட் கூட்டணிக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன் அதே போல இந்திய தேர்வாளர்களுக்கும் செல்வாக்கு இருக்கிறது. இதனால் தான் அவர் மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார். இது பாராட்டுக்குரிய ஒரு செயல்” என்று தெரிவித்திருக்கிறார்!