விராட்கோலி அல்ல ; ஆசியக் கோப்பையில் இந்த வீரரே அதிக ரன்களை குவிப்பார் – முகமது யூசுப் கணிப்பு!

0
128
Mohammed Yusuf

இன்று தொடங்க உள்ள 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பல வகைகளில் எதிர்பார்ப்பு மிகுந்த ஒரு கிரிக்கெட் தொடராக மாறியிருக்கிறது. ஆக இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் குறைந்தது இரண்டு முறை மோதிக்கொள்வது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் இதைத் தாண்டி நிறைய விஷயங்கள் இந்த ஆசியக் கோப்பை தொடருக்குள் இருக்கிறது!

சமகால கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று எடுத்துக்கொண்டால் உச்சரிக்கப்படும் பெயர்கள் விராட் கோலி, பாபர் ஆசம். அப்போது இவர்கள் ஒரே தொடரில் விளையாடுவதோடு எதிர்த்தும் விளையாட இருக்கிறார்கள். மேலும் விராட் கோலி ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடி இருக்கிறார். தற்போது பேக்கிங் பார்ம்ஸ் அறிந்துள்ள அவர் போட்டிக்கு திரும்புவது சுவாரசியமான ஒன்று.

- Advertisement -

அடுத்து ஆசிய கோப்பை முடிந்ததும் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் தொடங்க இருக்கிறது. இந்த ஆசிய கோப்பை தொடர் டி20 உலகக் கோப்பைக்கான ஒரு ஒத்திகை ஆகவும் இருக்கிறது. மேலும் ஒவ்வொரு அணிகளும் தங்கள் பலம் பலவீனத்தை மதிப்பிட இந்தத் தொடர் உதவும். அதேபோல் உலக கோப்பையில் விளையாட உள்ள ஆசிய அணிகளின் பலம் பலவீனத்தை மற்ற அணிகள் எடைபோடும் இந்த தொடர் உதவும். இப்படி எடுத்துக் கொண்டால் இந்த தொடர் பலவகைகளில் சுவாரசியமானதாக முக்கியமானதாக இருக்கிறது!

இந்த வகையில் இந்தத் தொடரில் எந்த அணியின் கேப்டன் அதிக ரன்களை எடுப்பார் என்ற கேள்வி இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் இடம் வைக்கப்பட்டது. அதற்கு அவர் ” பத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ரன்களை இந்திய கேப்டன் ரோகித் சர்மா அடிப்பார். அதிக ரன்கள் என்றால் பாகிஸ்தான் அணியில் பாபர் ஆஸம் அடிப்பார்” என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் லெஜெண்ட் பேட்ஸ்மேனும், தற்போது பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முகமது யூசுப் குறித்து கருத்து தெரிவிக்கும் போது மிக நம்பிக்கையாக கேப்டன் பாபர் ஆசமை குறிப்பிட்டு இருக்கிறார்.

- Advertisement -

அவர் கூறும் பொழுது ” பாபர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். சமீப காலங்களில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவது தான் இதற்கு உதாரணம். அவர் அழுத்தத்தின் கீழ் மிகச் சிறப்பாக விளையாடுகிறார். அழுத்தத்தின் கீழ் சிறப்பான வீரர்கள்தான் சிறப்பாக விளையாட முடியும். ஒரு கேப்டன் தனது தனிப்பட்ட திறமைகள் கவனம் செலுத்துவது எளிதான ஒரு விஷயம் கிடையாது. ஆனால் பாபர் இதை சிறப்பாக செய்கிறார்” என்று கூறினார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஆசிய கோப்பை தொடரில் பாபர் ஒரு பேட்ஸ்மேனாக மிகச் சிறப்பாக செயல்படுவார் அதிக ரன்களை அவர் குவிப்பார்” என்று தனது கருத்தாக பதிவு செய்து இருக்கிறார். ரோகித் சர்மா ஆசிய கோப்பையில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக 26 இன்னிங்சில் 883 ரன்கள் குவித்திருக்கிறார். இன்னும் எண்பத்தி ஒன்பது ரன்கள் அடித்தால் அவர் சச்சினை காட்டுவார். பாபர் ஆசம் இந்த ஆண்டு மொத்தம் 9 ஒருநாள் போட்டிகள் ஒரு 20 20 போட்டிகள் என மொத்தம் 10 வெள்ளை பந்து போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் ஆறு அரைசதங்கள், மூன்று சதங்களை விளாசி மிகச் சிறப்பான பேட்டிங் பார்மில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!