“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்த வீரர் தான் விக்கெட் கீப்பராக செயல்பட வேண்டும்” – ரோஹித் சர்மாவிடம் சுனில் கவாஸ்கர் கோரிக்கை!

0
4193

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது. இலங்கை அணியுடனான நியூசிலாந்து அணியின் வெற்றியை தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

வருகின்ற ஜூன் மாதம் ஏழாம் தேதி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறயிருக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இருக்கிறது. 2021 ஆம் ஆண்டின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளுக்கு இந்திய அணி தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் தோல்வியை தழுவியது இந்தியா.

- Advertisement -

தற்போது இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்று இருக்கிறது இந்திய அணி. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறாதது இங்கிலாந்தின் காலச் சூழ்நிலையில் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. பந்துவீச்சை பொறுத்தவரை முகமது சாமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ் என வேகப்பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருக்கின்றனர். ஆனால் இந்திய அணிக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்.

ரிசப் பண்ட் விபத்து காரணமாக அணியில் இடம் பெறாத சூழ்நிலையில் ஆஸ்திரேலிய தொடரின் போது விக்கெட் கீப்பராக களம் இறங்கிய ஸ்ரீகர் பரத் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டு துறைகளிலுமே சிறப்பாக செயல்படவில்லை. அவரது விக்கெட் கீப்பிங் இருக்கும் குறைபாடுகளை பற்றி போட்டியின் வர்ணனையின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் விமர்சித்திருந்தார். இந்நிலையில் 4 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் அதிகபட்சமாக 44 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு கே.எல் ராகுல் விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும் என தான் ரோகித் சர்மாவிற்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசி இருக்கும் கவாஸ்கர் ” இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் போது கே .எல் ராகுல் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக விளையாட வேண்டும் என்று நான் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கோரிக்கை வைக்கிறேன்” என தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசுகையில் “கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது கே.எல் ராகுல் மிகச் சிறப்பாக செயல்பட்டு லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்தார். அந்தப் போட்டி தொடர் தான் அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு மீண்டும் திரும்புவதற்கு வாய்ப்பாக அமைந்தது. அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் களம் இறங்கி ஆடும் போது இந்திய அணியின் பேட்டிங் வரிசையும் வலுப்படும்”என தெரிவித்தார்.

இது பற்றி தொடர்ந்து பேசிய கவாஸ்கர் ” இந்திய அணி நிர்வாகம் ஒரு நாள் போட்டிகளுக்கு கே எல் ராகுலை பிரதானமான விக்கெட் கீப்பராக தேர்வு செய்து இருக்கிறது. அவரை ஒரு டெஸ்ட் போட்டிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக தேர்வு செய்து பார்க்கலாம். மேலும் இங்கிலாந்து மைதானங்களில் விக்கெட் கீப்பிங் செய்வது என்பது அவ்வளவு கடினமான வேலையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார். இந்திய மைதானங்களில் தான் சூழல் பந்து வீச்சுக்கு எதிராக விக்கெட் கீப்பிங் செய்வது கடினம். மேலும் கே.எல். ராகுலின் பேட்டிங் இந்திய அணிக்கு மிகவும் ஒரு பலமாக அமையும். அவருக்கு பதில் இஷான் கிசானை கூட விக்கெட் கீப்பராக தேர்வு செய்யலாம்”எனவும் அவர் தெரிவித்தார்.

“அவர்கள் கே.எஸ் பரத்தை வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தேர்வு செய்கிறார்களா இல்லையா என்பது அணி நிர்வாகம் மற்றும் தேர்வு குழுவினரை பொறுத்தது. ஆனால் நான் ரோகித் சர்மாவிடம் வைக்கும் கோரிக்கை கேஎல் ராகுலை அந்த போட்டியில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆக ஆட வைத்து பார்க்க வேண்டும் என்பதுதான்”என கூறி முடித்தார் கவாஸ்கர்.