“எம்.எஸ் தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணியை இந்த வீரர் தான் வழிநடத்த வேண்டும் ” – அதற்கான காரணங்கள்!

0
362

2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வருகின்ற வெள்ளிக்கிழமை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வைத்து துவங்க இருக்கிறது. இந்த வருட ஐபிஎல் இன் முதல் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத இருக்கின்றன.

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு கடந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையவில்லை புள்ளிகளின் பட்டியலில் இறுதியில் உள்ள இடங்களே கிடைத்தது . மேலும் இந்த வருட ஐபிஎல் போட்டி அதன் பாரம்பரிய முறைக்கு திரும்பி இருப்பதால் சி.எஸ்.கே ரசிகர்கள் தோணியிடம் இருந்து மற்றும் ஒரு ஸ்பெஷலான ஆட்டத்தை எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

இந்த வருட ஐபிஎல் போட்டிகள் மகேந்திர சிங் தோனியின் இறுதி ஐபிஎல் தொடராகவே பார்க்கப்படுகிறது. தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று மூன்றாண்டுகள் ஆகிறது. கடந்த வருட ஐபிஎல் இன் போதே எப்போது ஓய்வு பெறுகிறீர்கள் என்று கேள்விக்கு சென்னையில் விளையாடாமல் ஓய்வு பெற மாட்டேன் என பதில் அளித்து இருந்தார். இந்த வருடமும் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெறுவதால் இதுவே அவரது ஐபிஎல் இன் கடைசி தொடராக இருக்கும் என கிரிக்கெட் விமர்சிகர்களிடமிருந்து கருத்துக்கள் வருகின்றன.

ஒருவேளை இது தோனியின் கடைசி தொடராக இருக்கும் பட்சத்தில் சிஎஸ்கே அணிக்கு அடுத்த கேப்டனாக யார் வருவார் என்ற கேள்வி ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் நிச்சயமாக எழும். கடந்த வருட போட்டிகளுக்கு முன்பாக டோனி ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பை கொடுத்தார். ஆனால் ரவீந்திர ஜடேஜாபால் அந்த பொறுப்பை சரியாக நிர்வகிக்க முடியாததால் மகேந்திர சிங் தோனி இடமே கேப்டன்சி திரும்ப வந்தது. தற்போது இருக்கும் வீரர்களில் சென்னையை வழிநடத்த தகுதியான வீரர் என்றால் அது இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் தான் . இரண்டு கோடி அடிப்படை விலையை கொண்ட ஸ்டோக்ஸ் 16.25 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணியால் போட்டி போட்டுக் கொண்டு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஏன் பென்ஸ் ஸ்டோக்ஸ் மகேந்திர சிங் தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக வரவேண்டும் என்றால் தோனியை போலவே பென் ஸ்டோக்ஸும் ஒரு நேச்சுரலான தலைமை பண்பு கொண்டவர். அவர் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக கடைசி வரை நின்று ஆடிய 84 ரன்கள் 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் எடுத்த அறை சதமும் அவர் இக்கட்டான சூழ்நிலையிலும் அணியை வழிநடத்தக் கூடிய தன்மையை காட்டுகிறது .

- Advertisement -

மேலும் தோனி விட்டு சென்ற இடம் என்பது நிரப்ப முடியாத ஒன்றுதான். தோனி ஒரு மேட்ச் வின்னர் ஆகவும் தன்னுடைய தலைமை பண்பின் மூலம் சிஎஸ்கே அணியில் இருக்கக்கூடிய வீரர்களின் மரியாதை பெற்றிருப்பவர். மேலும் தோனியை போன்ற ஒரு வலுவான ஆளுமையை மாற்றுவதற்கு ஸ்டோக்ஸ் தான் சரியான தேர்வாக இருப்பார். ஒரு மேட்ச் வின்னர் என்ற அந்தஸ்தை கொண்டு அவர் சக வீரர்களின் மதிப்பை பெறுகிறார். அவரிடமிருந்து ஒரு கிரிக்கெட் வீரராகவும் தலைவராகவும் இளம் வீரர்கள் நிறைய கற்றுக் கொள்வார்கள் . டாக்ஸ் ஒரு போராடும் வீரராக புகழ்பெற்றவர் வெற்றிக்காக அனைத்தையும் கொடுத்து இறுதி வரை போராடக் கூடியவர். இதனால் அவர் ஒரு முன்மாதிரியான வீரராக இருக்க முடியும் .தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணியை வழிநடத்த ஒரு சரியான வீரர் அவர்தான்