தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்த வீரர்தான் மிக முக்கிய வீரராக பங்காற்ற போகிறார் – அடித்துச் சொல்லும் ஜாகிர் கான்

0
38

ஐபிஎல் தொடர் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இன்று முதல் இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் அதிரடியாக தொடங்கியிருக்கிறது.

கேப்டன் கே எல் ராகுல் இந்திய அணியை தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் காயம் காரணமாக நேற்று தொடரில் இருந்து வெளியேறினார். அதேபோல ஸ்பின் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் கேஎல் ராகுல் இடத்திலிருந்து இந்திய அணியை ரிஷப் பண்ட் தலைமை தாங்க போகிறார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகிர் கான் நடைபெற இருக்கும் டி20 தொடரில் இந்திய அணியை சேர்ந்த ஒரு வீரர் முக்கிய வீரராக இருக்கப் போகிறார் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இந்த வீரர் இந்திய அணிக்கு முக்கிய வீரராக இருப்பார்

கேப்டன் ரோஹித் ஷர்மா,விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா அனைத்து எதிராக நடைபெறவிருக்கும் டி20 தொடரில் இந்திய அணியைச் சேர்ந்த ஹர்திக் பாண்டியா முக்கிய வீரராக காணப்படுவார் என்று ஜாகிர் கான் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 தொடருக்கு பின்னர் மீண்டும் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் விளையாட போகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் ஒரு கேப்டனாக அதேசமயத்தில் வீரராக மிக சிறப்பாக விளையாடினார். அதிரடியான பார்மில் இருக்கும் ஹர்திக் பாண்டியா தற்பொழுது அவர் தன்னுடைய கம்பேக்கை இந்திய அணியில் கொடுக்கப் போகிறார்.

சர்வதேச போட்டிகள் இனி அடுத்து அடுத்து நடக்கப் போகின்றன. குறிப்பாக இந்த ஆண்டு இறுதியில் உலக கோப்பை டி20 தொடர் நடைபெற இருக்கிறது. எனவே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நடைபெற இருக்கும் டி20 தொடரில் அவரிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை நாம் அதிக அளவு எதிர்பார்க்கலாம் என்று ஜாகிர் கான் கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கின்ற ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணி எப்படி விளையாடப் போகிறது என்பதை காண தற்பொழுதே தான் மிக ஆர்வமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.