ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் கேஎல் ராகுலுக்கு பேக்-அப் வீரராக இருக்கப் போகின்ற வீரர் இவர்தான் – வாசிம் ஜாபர் நம்பிக்கை

0
189

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக நடந்த முடிந்த இரண்டு போட்டியிலும் ருத்துராஜ் இந்திய அணிக்கு ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக விளையாடினார். முதல் போட்டியில் 15 பந்துகளில் 23 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் இரண்டாவது போட்டியில் ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்நிலையில் தற்போது அவர் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் ஒரு சில விஷயங்களை நம்மிடம் கூறியிருக்கிறார்.

உலகக் கோப்பை டி20 தொடரில் அவர் இந்திய அணியில் இணைய அதிக வாய்ப்புள்ளது

இந்திய அணியின் ஓப்பனிங் வீரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் கேஎல் ராகுல் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய அணியில் தற்போது கேஎல் ராகுலுக்கு மாற்று வீரர் முடிவு செய்யப்படவில்லை. தற்பொழுது மூன்றாவது ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக அவர் தான் ( ருத்துராஜ் ) உள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடினார். அதிக ரன்கள் குவிக்க வில்லை என்றாலும் அவரது ஆட்டம் நேர்த்தியாக இருந்தது. நிச்சயம் இனி வரும் போட்டிகளில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்படும் அதை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார். என்னைப் பொறுத்தவரையில் ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் அவர் கே எல் ராகுலுக்கு பேக்கப் வீரராக நிச்சயம் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

புவனேஸ்வர் குமார் அவருக்கான இடத்தை உறுதிப்படுத்தி விட்டார்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது போட்டியில் புவனேஸ்வர் குமார் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மற்ற பந்துவீச்சாளர்கள் சுமாராக பந்துவீசிய நிலையில் அவர் அன்று மிக அற்புதமாக பந்து வீசினார்.

புவனேஸ்வர் குமார் போன்ற ஒரு அனுபவம் உள்ள முன்னனி வீரர் இந்திய அணியில் இருப்பது அவசியம். இதில் யோசிக்க ஒரு விஷயமும் இல்லை. நிச்சயமாக உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் அவர் இடம்பெற்று விளையாடுவார் என்று வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.