இந்த வீரரால் என் வேகச் சாதனையை முறியடிக்க முடியும்! – சோயப் அக்தர் கணிப்பு!

0
488
Akthar

உலகின் அதிவேக பந்துவீச்சாளராக திகழ்ந்தவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் இவர் அதிவேகமாக பந்து வீசியதால் ‘ராவல்பின்டி எக்ஸ்பிரஸ்’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டவர் .உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் முதலாக 100 மைல் வேகத்தில் பந்துவீசி உலக சாதனை படைத்தவர் .

இவரது இந்த சாதனையை இதுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . 2003 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் நிக் நைட்டுக்கு எதிராக இவர் வீசிய பந்து உலகில் அதிகமாக வீசப்பட்ட பந்தாகும் . இந்தப் பந்தின் வேகம் மணிக்கு 161.4 .இந்த வேகத்தை இதுவரை எந்த வேகப் பந்துவீச்சாளர்களாலும் எட்ட முடியவில்லை . ஆஸ்திரேலியா அணியின் ஷான் டைட் மற்றும் பிரெட் லீ ஆகியோர் மணிக்கு 100 மைல் விதத்தில் பந்து வீசி இருந்தாலும் சோயப் அக்தரின் வேகத்தை எட்ட முடியவில்லை .

தனது அதிவேகப் பந்துவீச்சால் உலகை மிரட்டிய சோயப் அக்தர் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ‘மார்க் வுட்’ ஆல் மணிக்கு 100 மைல் வேகத்தில் பந்து வீச முடியும் என்று கூறியுள்ளார் . இது குறித்து இங்கிலாந்தின் கிரிக்கெட் கிளப் ஒன்றின் ‘போட் காஸ்ட் ‘ நிகழ்ச்சியில் பேசிய அக்தர் ” மார்க் வுட் ஒரு சிறந்த மனிதர் அவரது பந்துவீச்சு ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும், இன்று இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்களில் மார்க் வுட் தொடர்ச்சியாக மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி வருகிறார் ,மணிக்கு 155 கிலோ மீட்டருக்கு மேல் தன்னால் பந்து வீச முடியாது என்று ‘மார்க் வுட் ‘நினைத்தால் அது தவறு அவர் தீவிரமாக முயற்சி செய்தால் மணிக்கு 100 மைல் வேகத்தை எட்ட முடியும் அதற்காக அவர் என்னைப் போன்று ‘ட்ரக்க்குகளை’ இழுத்து பயிற்சி செய்ய வேண்டும் ” என்றும் கூறினார்,

தற்போது இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது அந்த அணியில் மார்க் வுட்டும் இடம் பெற்றுள்ளார் முதல் போட்டியில் சிறிய காயம் காரணமாக அவர் பங்கேற்கவில்லை . இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை முல்தானில் நடைபெறுகிறது .

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் மார்க் வுட்’தான் அதி வேகமாக பந்து வீசியவர் என்பது குறிப்பிடத்தக்கது .குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு அதிக விக்கெட்களை வீழ்த்தியவரும் இவர்தான் .