சஞ்சு சாம்சன் உம்ரான் மாலிக்குக்கு இதனால்தான் வாய்ப்பு தரவில்லை – ஹர்திக் பாண்டியா பேட்டி!

0
5228
Hardikpandya

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடர் இன்றுடன் முடிவடைந்தது இதில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது .

மூன்றாவது நடைபெற்ற டி20 போட்டி மழையின் காரணமாக DLS விதிகளின்படி சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே இரண்டாவது போட்டியை இந்திய அணி வெற்றி பெற்ற காரணத்தினால் 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் கார்த்திக் பாண்டியா கலந்துகொண்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் . அதில் பெரும்பாலான கேள்விகள் இந்திய அணியில் இளம் வீரர்களின் வாய்ப்புகளைப் பற்றிய கேள்விகளாகவே இருந்தது .

ஒரு பத்திரிக்கையாளர் ஹர்திக் பாண்டியாவிடம் சஞ்சீவ் சாம்சன் மற்றும் உம்ரான் மாலிக்கிற்கு ஏன் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று கேட்டிருந்தார் . அதற்கு பதில் அளித்த ஹர்திக் பாண்டியா பின்வருமாறு கூறினார் .

“முதலாவதாக இது ஒரு சிறிய தொடர் இந்த ஒரே தொடரில் எல்லா வீரர்களுக்கும் வாய்ப்புகளை வழங்க இயலாது மேலும் எந்த அணி சிறந்த அணி என்பதை நான் பயிற்சியாளருடன் கலந்தாலோசித்து அணியை தேர்வு செய்து விளையாடினோம். அதனால் மற்ற வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்க முடியவில்லை.”

- Advertisement -

மேலும் அவர் கூறியது ” அடுத்த உலகக் கோப்பைக்கு நம்மிடம் இன்னும் நிறைய கால அவகாசங்கள் இருக்கின்றன . இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படாத வீரர்களுக்கு அடுத்தடுத்த தொடர்களில் நிறைய வாய்ப்புகள் வழங்கப்படும்” என்றும் தெரிவித்தார் .

“இன்னும் ஒரு சில போட்டிகள் இருந்திருந்தால் மற்ற வீரர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கி இருப்போம் ஆனால் இது ஒரு சிறிய தொடராக அமைந்ததால் எங்களால் எல்லோருக்கும் வாய்ப்பு வழங்க முடியவில்லை இனிவரும் காலங்களில் அவர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படும் மேலும் நீண்ட வாய்ப்புகளும் அவர்களுக்கு வழங்கப்படும்” என்று கூறி முடித்தார் ,

உம்ரான் மாலிக் மற்றும் சஞ்சீவ் சாம்சன் இந்த இரண்டு பேரும் இந்திய அணியில் இடம் பெறுவது எல்லோரிடமும்மே பரவலாக எதிர்பார்ப்பு இருந்து கொண்டிருக்கிறது. இவர்கள் இரண்டு பேரும் ஒரு நாள் போட்டி தொடருக்கான அணியிலும் இடம் பெற்று இருப்பதால் அதில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . சஞ்சு சாம்சன் கடந்த முறை தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் உம்ரான் மாலிக்கும் நடந்து முடிந்த இராணி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது