பட்லருக்கு முன்னால் இதனால்தான் அஸ்வின் இறங்கினார் – சஞ்சு சாம்சன் ஓபன் டாக்!

0
1021
Sanju samson

ஐபிஎல் 16ஆவது சீசனில் அதிகபட்ச பரபரப்போடு இன்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே அசாம் கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டி அமைந்திருக்கிறது!

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் இருவரும் அதிரடியாக அரை சதங்கள் அடிக்க 20 ஓவர்கள் முடிவில் 197 ரன்கள் குவித்தது!

- Advertisement -

இதற்கு அடுத்து களம் கண்ட ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக பட்லருக்கு பதிலாக அஸ்வின் வந்தார். வந்ததோடு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். பட்லரும் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 11 ரன் எடுத்து கிளம்பினார்.

இதற்கடுத்து கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்கள் வெளியேற ஆட்டம் பஞ்சாப் பக்கத்தில் வந்தது. கடைசி நான்கு ஓவர்களுக்கு 69 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிம்ரன் ஹெட்மையர் மற்றும் துருவ் ஜுரல் இருவரும் மிகப் பிரமாதமாக விளையாடி கடைசி ஓவருக்கு 16 ரன்கள் தேவை என்று கொண்டு வந்தார்கள். அந்த ஓவரில் சிம்ரன் ஹெட்மையர் ஆட்டம் இழக்க பத்து ரன்கள் மட்டுமே வந்தது. முடிவில் பஞ்சாப் அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் இரண்டாவது வெற்றியை 5 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றது.

தோல்விக்கு பிறகு பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன்
” உண்மையைச் சொல்வது என்றால், இது பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமான விக்கெட். புதிய பந்தில் கூட எதுவுமே இல்லை. அவர்களும் நன்றாக பேட்டிங் செய்தார்கள். ஹை ஸ்கோரிங் விக்கெட் என்பதால் எங்கள் பந்துவீச்சாளர்கள் வேரியேஷன்களை பயன்படுத்தி நன்றாக வீசினார்கள். அவர்களை 197 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது மிகவும் சிறப்பானது என்று நினைத்தேன்!” என்று கூறினார்!

- Advertisement -

அஸ்வின் ஏன் பட்லருக்கு முன்னால் இறக்கப்பட்டார் என்று கூறும் பொழுது
” பட்லர் முழு உடல் தகுதியுடன் இல்லை. பீல்டிங் செய்யும் பொழுது அவரது விரலில் காயம் பட்டு இருந்தது. இதனால் நாங்கள் அஸ்வினை அனுப்பினோம். மிடில் ஓவர்களில் சுழற் பந்துவீச்சாளர்களை சமாளிக்க நாங்கள் படிக்கல்லை வைத்துக்கொண்டோம். இதற்காக பயிற்சியாளர்கள் அவருக்குப் பின்னால் நிறைய வேலைகள் செய்திருக்கிறார்கள்!” என்று கூறியுள்ளார்!

அறிமுக வீரர் துருவ் ஜுரல் பற்றி கூறுகையில் ” நாங்கள் ஐபிஎல் தொடருக்கு முன்பு ஒரு வாரம் முகாம் நடத்தினோம். ஆனால் அதற்கு முன்பே அவர் எங்கள் அகாடமியில் இணைந்து ஆயிரம் பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டு விளையாடி உழைத்திருந்தார். அவர் முன்னேறும் விதத்தில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இரண்டாவது பகுதி ஆட்டத்தின் போது பனி வரும் என்று நான் நினைத்தேன். ஆனால் அது தொடக்கம் முதலே இருந்தது. அடுத்த ஆட்டத்தில் இது போன்ற விஷயங்களுக்கு சிறப்பாக தயாராக வேண்டும் என்று இப்பொழுது தெரிகிறது!” என்று கூறியுள்ளார்!