ஜடேஜாவின் முட்டாள்தனம் இந்தியாவின் வெற்றியை பறித்துவிட்டது; நான் சொல்றதுக்கு காரணம் என்னன்னா? – கவாஸ்கர் சாடல்!

0
5432

மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி தோல்வியுற்றதற்கு முக்கிய காரணம் ஜடேஜா தான் என்று கடுமையாக விமர்சனப் பார்வை முன் வைத்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் சுதாரித்துக் கொண்டு விளையாடி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியைவிட 88 ரன்கள் முன்னிலை பெற்றது மிகப்பெரிய அளவில் பாதித்துவிட்டது என்று கூறலாம்.

ஏனெனில் இரண்டாவது இன்னிங்சில் 163 ரன்கள் அடித்திருந்தாலும் 88 ரன்கள் பின்தங்கி நிலையில் இருந்ததால், ஆஸ்திரேலிய அணியை விட 75 ரன்கள் மட்டுமே அதிகமாக அடிக்க முடிந்தது.

முதல் இன்னிங்சில் கவஜா மற்றும் லபுஜானே இருவரும் அமைத்த 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் இந்திய அணியை பாதித்துவிட்டது. குறிப்பாக லபுஜானேவை ஜீரோ ரன்னில் இருக்கும் பொழுது ஜடேஜா போல்ட் செய்தார். ஆனால் அந்த பந்து நோபால் ஆனது.

- Advertisement -

இந்த பார்ட்னர்ஷிப்பை குறிப்பிட்டு, இதுதான் இந்திய அணிக்கு பின்னடைவை தந்தது. ஜடேஜாவின் தவறு மட்டுமே தோல்வியை பெற்றுக் கொடுத்தது என்று விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர்

“இந்திய அணி தோல்வி அடைந்த விதத்தை திரும்பிப்பார்த்தால், ஒரு திருப்புமுனையாக இருந்தது கவாஜா மற்றும் அபுஜானே இருவரும் அமைத்த 96 ரன்கள் பார்ட்னர்ஷிப். அந்த இடத்தில் இந்திய அணி சரியாக விக்கெட்டுகளை எடுத்திருந்தால் இத்தகைய தோல்வியை சந்தித்திருக்காது. இந்நேரம் ஆட்டம் வெற்றியிலும் முடிவடைந்து இருக்கலாம். ஜடேஜா வீசிய அந்த நோபால் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. முட்டாள்தனம் என்றும் கூறலாம்.” என விமர்சித்தார்.