ஹர்திக் பாண்டியாவை இதற்காகத்தான் நாங்கள் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம் – திட்டத்தை விவரிக்கும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்

0
57

கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே பல இஞ்சுரிகளில் ஹர்திக் பாண்டியா தவித்து வந்தார். கடந்த ஆண்டு நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 தொடருக்கு பின்னர் அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஓய்வு எடுத்து தன்னை அவர் தயார்படுத்தி வந்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை கேப்டனாக வழிநடத்தி மிக அற்புதமாக விளையாடினார். 15 போட்டிகளில் 487 ரன்கள் குவித்து அசத்தியதோடு மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பேட்டிங் மற்றும் பவுலிங்கை கடந்து பீல்டிங்கிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். எல்லாவற்றையும் விட அவருடைய கேப்டன்சி தரமாக இருந்தது. இவை அனைத்திற்கும் பரிசாக நாளை நடைபெற இருக்கின்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் மீண்டும் இந்திய அணியில் விளையாட தயாராகி வருகிறார்.

- Advertisement -

அவரிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை நாங்கள் பெற விரும்புகிறோம்

நாளை முதல் டி20 போட்டி நடைபெற இருப்பதை தொடர்ந்து, இந்திய அணி வீரர்களுடன் ஹர்திக் பாண்டியா தற்போது பயிற்சி எடுத்து வருகிறார். அவர் சம்பந்தமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் ஒரு சில விஷயங்களை தற்பொழுது பேசியிருக்கிறார்.

“ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாடிய விதம் மிக அற்புதமாக இருந்தது. என்னுடைய ஆட்டத்தை அவர் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார். கேப்டனாகவும் அவருடைய தலைமை பண்பு மிக அற்புதமாக இருந்தது. பேட்டிங் பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து ஏரியாக்களிலும் குஜராத் அணியில் விளையாடிய அதே ஆட்டத்தை இந்திய அணியிலும் பெற விரும்புகிறோம். இந்திய அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய அளவில் அது கை கொடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

எப்படி விளையாட போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

ராகுல் டிராவிட் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் குறித்தும் பெருமையாக பேசி இருக்கிறார்.”இளம் வீரராக அவர் இவ்வளவு சிறப்பாக பந்து வீசுவது மிகவும் மகிழ்ச்சி. அணியில் தற்பொழுது சீனியர் வீரர்கள் புவனேஸ்வர் குமார், ஹார்ஷால் பட்டேல் மற்றும் சிராஜ் இருக்கும் நிலையில் இவரும் இருப்பது வரவேற்கத்தக்கது.

அனி பட்டியல் நீளம் என்பதால் அனைத்து வீரர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க முடியாது. உம்ரான் மாலிக் எவ்வாறு விளையாடப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். உம்ரான் மாலிக் உடன் அர்ஷ்தீப் சிங் இருப்பது வரவேற்கத்தக்கது. இரண்டு சிறந்த இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால், நிறைய திட்டங்களை மாற்றி மாற்றி எங்களால் பயன்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.