“முதல் போட்டி முதல் பந்தில் அவுட் ஆனப்ப மகிபாய் என்கிட்ட இதைத்தான் சொன்னாரு” – சுரேஷ் ரெய்னா சொன்ன சுவாரசிய சம்பவம்!

0
535
Raina

இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த இடதுகை பேட்ஸ்மேன்களில் வெள்ளைப்பந்தில் சுரேஷ் ரெய்னா மிக மிக முக்கியமானவர். பேட்டிங் மட்டும் இல்லாமல் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என எல்லாவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்!

மகேந்திர சிங் தோனியின் வழிநடத்தலின் கீழ் இந்திய கிரிக்கெட் உருவாகி வந்த பொழுது அதில் வளர்ந்த வீரர்களில் சுரேஷ் ரெய்னாவும் ஒருவர். 2011 மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற பொழுது சுரேஷ் ரெய்னா அணியில் இடம் பெற்று சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார்!

- Advertisement -

ஆனால் சுரேஷ் ரெய்னாவுக்கு அவருடைய முதல் போட்டி சிறப்பானதாக அமையவில்லை. இலங்கைக்கு எதிரான அந்தப் போட்டியில் முரளிதரன் பந்துவீச்சில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து சுரேஷ் ரெய்னா வெளியேறினார்.

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா இப்பொழுது கூறும்பொழுது “நான் 2005ல் இலங்கைக்கு எதிராக அறிமுகமான. முரளிதரனின் பந்தில் உடனே ஆட்டம் இழந்தேன். அப்பொழுது எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்று நான் யோசித்துக் கொண்டே டிரெஸ்ஸிங் ரூமுக்கு நடந்தேன்.

மகி பாய், இர்ஃபான் மற்றும் ராகுல் பாய் மூன்று பேரும் என்னிடம் எதற்காக வருத்தப்பட வேண்டாம் என்று சொன்னார்கள். பீல்டிங்கில் கவனம் செலுத்தி ஏதாவது செய்து கொள்ளலாம் என்று சொன்னார்கள். அவர்களுக்கு இதுவெல்லாம் தெரிந்திருந்தது.

- Advertisement -

பின்பு நான் அந்த ஆட்டத்தில் அட்டப்பட்டுவை ரன் அவுட் செய்தேன். அதன் பிறகு நான் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்குத் தகுதியானவன் என்று உணர்ந்தேன்.

ஒவ்வொரு சீனியர் வீரர்களும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சச்சின் பாஜி ஓய்வறையில் இருந்ததை பார்க்கும் பொழுது எங்களுக்கு அது இந்தியாவிற்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது.

நம்பர் மூன்று மற்றும் நான்கில் விளையாட இடம் கிடைத்தது. அது மிகவும் நன்றாக இருந்தது. அப்பொழுது நாங்கள் அந்தத் தொடரை 4-3 என வென்றதாக ஞாபகம் இருக்கிறது. ஒருமுறை தோனி பாயுடன் இணைந்து 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததில் நான் சிறப்பான ரன்களை எடுத்து இருந்தேன். அப்போது இருந்து தேர்வாளர்களும் பயிற்சியாளரும் என் மீது நம்பிக்கை வைத்தார்கள்.

ஒரு தேர்வாளராக திலீப் வெங்சர்க்கர் எனது பயணத்தில் பெரும்பங்கை வகித்திருக்கிறார். எனக்கு மட்டுமல்ல அம்பதி ராயுடு, ஆர்பி சிங், வி ஆர் வி சிங், ராபின் உத்தப்பா, விராட் கோலி, பைஸ் பஸல் போன்ற பல இளைஞர்களுக்கும் அந்தச் சமயத்தில் அணியில் வாய்ப்பு அளித்தார்!” என்று கூறியிருக்கிறார்!