“இந்தியாவுக்கு எதிரா அரையிறுதியில் விளையாடறது இப்படித்தான் இருக்கும்.. ஆனா..!” – கேப்டன் வில்லியம்சன் பேட்டி!

0
31145
Williamson

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் 23 ஓவர்களில் இலங்கை அணியை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த வெற்றியின் மூலமாக நியூசிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிவாகிவிட்டது என்று கூறலாம். சாத்தியமில்லாத ரன் ரேட்டில் பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டிய நிலையில் இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து இருக்கின்ற காரணத்தினால், முதல் இடத்தைப் பிடித்து இருக்கின்ற இந்திய அணிக்கு எதிராக மும்பையில் அரையிறுதியில் விளையாட இருக்கிறது!

இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீசி இலங்கை அணியை 171 ரன்களுக்கு சுருட்டி, இலக்கை 23 ஓவர்களில் எட்டி அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து. முக்கிய மூன்று விக்கெட் கைப்பற்றிய போல்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்குப் பின் பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறும்பொழுது “இது உண்மையில் சிறந்த பெர்பார்மன்ஸ். மிடில் ஓவர்களிலும் ஆரம்ப நிலையிலும் ஸ்பின் விளையாடுவது கடினமாக இருந்தது. சேஸ் செய்யும் பொழுது எங்கள் வீரர்கள் நல்ல இன்டெண்ட் காட்டினார்கள்.

- Advertisement -

இன்று ஏதாவது போட்டியின் பிற்பகுதியில் மழை வரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இது போன்ற விஷயங்களை சரியாக கணிப்பது எப்பொழுதும் கடினம்.

எங்களால் இன்றைய போட்டியில் இலங்கை விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்ததில் மகிழ்ச்சி. பெரேரா போன்ற ஒரு வீரர் ஆட்டத்தை எளிதாக பறித்து விடக் கூடியவர். எங்கள் அணியில் இருந்து ஐந்தாவது மற்றும் ஆறாவது சுழற் பந்துவீச்சாளர்களை கொண்டு வருவது நல்ல விஷயம்.

அடுத்த நாங்கள் என்ன செய்வோம் என்று தெரியவில்லை. இரண்டு நாட்கள் விடுமுறை இருக்கிறது. விஷயங்கள் நம் வழியில் இருந்து அதிர்ஷ்டம் இருந்தால் அரை இறுதியில் நன்றாக இருக்கும். சொந்த மண்ணில் இந்தியாவை எதிர்கொள்வது சாதாரண விஷயம் கிடையாது. அது சவாலானதாக இருக்கும். அதிர்ஷ்டம் இருக்கும் பட்சத்தில் எல்லாம் மாறும்!” என்று கூறியிருக்கிறார்!