இந்தியா செய்ய வேண்டியது இதுலதான் இருக்கு, ஷாகித் அப்ரிடி விளக்கம்!

0
5856
Afridi

நடப்பு எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் அரை இறுதியில் படுதோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறி இருக்கிறது!

இந்திய அணி கடைசியாக மகேந்திர சிங் தோனி தலைமையில் டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. அதற்கு முன்பு இந்திய அணியை உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றவர்களாக கபில்தேவ் மற்றும் கங்குலி ஆகியோர் இருக்கிறார்கள்!

- Advertisement -

2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதற்கு பிறகு தற்போது வரை எந்த ஒரு கிரிக்கெட் வடிவத்திலும் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது கிடையாது. தோனிக்குப் பிறகு விராட் கோலி வந்தார் அதற்குப் பிறகு ரோகித் சர்மா வந்தார் ஆனால் உலகக்கோப்பை தோனி உடன் வருகையை நிறுத்திக் கொண்டது!

இப்படியான நிலையில் நேற்று தோல்வி என்பதை தாண்டி ஒரு சரணடைதல் நிகழ்ந்திருக்கிறது. எந்தவிதப் போராட்டமும் செய்யாமல் பத்து விக்கெட் வித்தியாசத்தில் அடைந்த தோல்வி இந்திய அணி மீதும் நிர்வாகம் மீதும் கேப்டன் மீதும் கடுமையான விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.

தற்போது இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கூறுகையில் ” எல்லா விஷயங்களும் இப்போதுதான் பார்க்கப்படும். இதுவே நீங்கள் வெற்றி பெறும் பொழுது அது கம்பளத்தின் அடியில் போய்விடும். இன்று இந்தியா தோற்றது, எல்லோரும் இந்தத் தோல்வியைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் தற்போது இந்திய அணிக்கு தேவை ஒரு நல்ல தலைமை. கங்குலி தோனிக்கு பிறகு அப்படி யாரும் வரவில்லை. தோனிக்குப் பிறகு விராட் கோலியை முயற்சித்தார்கள் பிறகு ரோகித் சர்மா கொண்டுவரப்பட்டார் இவரிடம் இன்னும் நாம் பாராட்டத்தக்க விஷயங்களைப் பார்க்கவில்லை” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ஆட்டத்தில் ஒரு தலைவரின் பங்கு மிகவும் முக்கியமானது. அவர்களின் செயல் திறன் முக்கியமானது. ஐபிஎல் இரண்டு மாதங்களுக்கு மேல் விளையாடப்படுகிறது நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பும் கிடைக்கிறது. என் கருத்துப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் நிறைய திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். இப்படி இருந்தும் ஒரு நல்ல அணியை உருவாக்க முடியாவிட்டால் அவர்கள் எங்கு தவறு செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்கள் கிரிக்கெட்டில் முதலீடு செய்து நிறைய கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் நீங்கள் வெளியில் சென்று பெரிய தொடர்களை வெல்லாவிட்டால் அது கவலைக்குரிய அம்சமாகும் ” என்று கூறியிருக்கிறார்!