“போட்டிக்கு முன்ன எங்க டீம்ல இதைத்தான் சொன்னேன்.. இப்படித்தான் ஜெயிச்சோம்!” – கம்மின்ஸ் மாஸ் இன்ஃபர்மேஷன்!

0
1786
Cummins

ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு முன்பாக மூன்று போட்டிகளை தோற்று இருந்தது. மேலும் உலகக்கோப்பைக்கு வந்து முதல் இரண்டு ஆட்டங்களை தோற்றது.

இந்த நிலையில் அந்த நேரத்தில் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்திற்கு ஆஸ்திரேலியா அணி குறித்து யாருக்கும் பெரிதான நம்பிக்கைகள் ஏதுமில்லை. இதனால் ஆஸ்திரேலியா அணி மீது விமர்சனங்களும் அதிகமாக இருந்தன.

- Advertisement -

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணி இலங்கைக்கு எதிரான போட்டியில்தான் திரும்பி வந்தது. அந்தப் போட்டியிலும் இலங்கை துவக்க ஆட்டக்காரர்களை 120 ரன்களுக்கு மேல் அடிக்க விட்டு இருந்தது. இலங்கையின் பின் வரிசை ஆட்டக்காரர்கள் அதை பயன்படுத்திக் கொள்ளாததால் ஆஸ்திரேலியா மெல்ல நிமிர்ந்தது.

இங்கிருந்து ஆரம்பித்த ஆஸ்திரேலியாவின் வெற்றி பயணத்தை அதற்கு மேல் யாராலும் நிறுத்த முடியவில்லை. தொடர்ச்சியாக ஒன்பது போட்டிகளை வென்றதோடு உலகக் கோப்பையையும் கைப்பற்றி உலக சாம்பியனாக தலை நிமிர்ந்து நிற்கிறது.

இறுதிப்போட்டி நடைபெற்ற குஜராத் அகமதாபாத் மைதானத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் வசதி கொண்டு இருக்கிறது. முழுக்க முழுக்க இது இந்திய ரசிகர்களால் மட்டுமே நிரம்பும் என்பதும் உறுதியானது.

- Advertisement -

போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலியாவின் கேப்டன் கம்மின்ஸ் இவ்வளவு பெரிய கூட்டத்தை அமைதிப்படுத்துவதை விட பெரிய திருப்தியான உணர்வு எதுவும் கிடையாது, நாங்கள் நிச்சயம் அவர்களை அமைதிப்படுத்துவோம் என்று சவால் விட்டிருந்தார்.

இந்தச் சவாலில் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் வெற்றி பெற்றும் இருந்தார். போட்டியில் அவர் வீழ்த்திய ஸ்ரேயாஸ் மற்றும் விராட் கோலியின் விக்கட்டுகள் ஆட்டத்தை அப்படியே ஆஸ்திரேலியாவின் பக்கம் கொண்டு சென்றது. மேலும் ஒட்டுமொத்த குஜராத் அகமதாபாத் மைதானத்தையும் அமைதியாக்கியது.

இதுகுறித்து தற்பொழுது பேசி இருக்கும் ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் கூறும்பொழுது “நான் என்னுடைய அணி வீரர்களிடம் என்ன சொன்னேன் என்றால், இன்றைய நாளில் யாரும் நம்முடைய வேலையை செய்வார்கள் என்று தள்ளி இருக்க முடியாத நாள். நாம் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள். எனவே எதைப் பற்றியும் கவலைப்படாமல் நாம் நம்முடைய வேலையை செய்ய வேண்டும் என்று கூறினேன். எல்லோரும் மேட்ச் வின்னர்கள் போல செயல்பட வேண்டும் என்று கூறினேன். அவர்கள் அப்படியே செய்தார்கள்.

போட்டியில் 12வது வீரராக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். நிச்சயம் அவர்களுடைய ஆதரவு குரல் ஆட்டத்தை விட்டு நம்மை தூக்கி எறிந்து விடும். எனவே அவர்களை அமைதிப்படுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டோம். அதை நாங்கள் செய்யவும் செய்தோம். அது கொஞ்சம் வினோதமாக இருந்தது. அதை நாங்கள் கொண்டாடவும் செய்தோம்!” என்று கூறியிருக்கிறார்.