“சிஎஸ்கேல தோனி இல்லனா இதான் நடக்கும்.. ஆனா மும்பை இந்தியன்ஸ் அப்படி கிடையாது!” – அம்பதி ராயுடு தைரியமான பேச்சு!

0
3963
Dhoni

இன்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தாண்டி உலகெங்கிலும் இருந்து கிரிக்கெட் ரசிகர்களை கனிசமாக ஈர்த்து உள்ள தொடராக இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வரும் ஐபிஎல் தொடர் அமைந்திருக்கிறது.

16 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மிகவும் முக்கியமான ஒரு தொடர். அவர்கள் இரண்டு வருட தடைக்குப் பிறகு திரும்ப வந்தார்கள்.

- Advertisement -

இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வாங்கப்பட்ட அம்பதி ராயுடு இருந்தார். பலவீரர்களிடம் இருந்தும் சிறந்ததை வாங்குவதில் மகேந்திர சிங் தோனி கில்லாடி. அந்த வருடமும் அம்பதியராய்டுவை துவக்க வீரராக அனுப்பி அப்படித்தான் சாதித்தார் தோனி.

அம்பதி ராயுடு சிறப்பாக செயல்பட அந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் 2021 மற்றும் 2023 என மூன்று முறை சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் அம்பதி ராயுடு அங்கம் வகித்திருந்தார்.

மேலும் அம்பதி ராயுடு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த பொழுது மூன்று முறை சாம்பியன்ஷிப் வென்ற பொழுது அந்த அணியில் விளையாடும் வீரராக இருந்தார். ஒரு தனி வீரராக அவர் ஆறு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் ஒரு சுவாரசியமான விஷயமாக, ஆதிக்கம் செலுத்தும் இரண்டு அணிகளான மும்பை மற்றும் சென்னை என இரண்டு அணிகளிலும் சரிசமமான பங்களிப்பை கொண்ட வீரராக அம்பதி ராயுடு இருக்கிறார். வேறு எந்த வீரருக்கும் இப்படி ஒரு அனுபவம் ஐபிஎல் தொடரில் இனியும் கிடைக்குமா என்பது சந்தேகம்.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 அணிகள் குறித்தும் பேசி உள்ள அவர் கூறும் பொழுது ” நான் ஒரு வீரராக சொல்கிறேன், மும்பை இந்தியன்ஸ் அணியில் எக்ஸ், ஒய் என எந்த வீரர்கள் விளையாடினாலும், அவர்களை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஆகத்தான் பார்ப்பார்கள். அங்கு எல்லோரும் இந்த விஷயத்தில் ரசிகர்களுக்கு சமம்.

அதே சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு முதலில் தோனி. அதற்கு அடுத்ததுதான் சிஎஸ்கே. தோனி சிஎஸ்கே அணியில் இல்லை என்றால் அங்கு பாதி மைதானம் நிரம்பும் என்று கூட சொல்ல முடியாது. அவர்கள் அனைவருமே மகேந்திர சிங் தோனியின் ரசிகர்கள்!” என்று!