“தயாரிப்பே இல்லாம ஆடினால் இப்படித்தான் நடக்கும்!” – தோல்விக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் விரக்தி பேச்சு!

0
906
Odiwc2023

ஜிம்பாப்வே நாட்டில் நடந்த வரும் உலகக் கோப்பை தகுதி சுற்றில் ஒருநாள் உலகக் கோப்பை முன்னாள் சாம்பியன்களான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்ரீலங்கா என இரண்டு அணிகள் கலந்து கொண்டது.

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த இரண்டு அணிகளை விட, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளின் ஒருநாள் கிரிக்கெட் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்த காரணத்தினால், அந்த இரண்டு அணிகளும் நேரடியாக இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றன.

- Advertisement -

இந்த வகையில் உலகக் கோப்பையில் சாம்பியன் ஆகாவிட்டாலும் கூட பெரிய அளவில் சிறப்பான செயல்பாட்டை கொண்டு இருக்காத பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற பொழுது, உலகக்கோப்பை முன்னாள் சாம்பியன்களான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்ரீலங்கா தகுதி சுற்றில் விளையாட வேண்டி இருந்தது அந்த நாட்டு கிரிக்கெட்டுக்கு சோகமான விஷயமே!

இந்த நிலையில் தகுதி சுற்றில் ஸ்ரீலங்கா மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஏறக்குறைய தங்களது உலகக்கோப்பை வாய்ப்பை உறுதி செய்திருக்கிறது. இன்னொரு பக்கத்தில் ஸ்ரீலங்கா அளவுக்கு ஜிம்பாபேவும் தனது உலகக் கோப்பை வாய்ப்பை உறுதி செய்திருக்கிறது.

ஆனால் இரண்டு முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணி லீக் சுற்றில் பெரிய ஸ்கோர்களை அடித்தும் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளிடம் தோல்வி அடைந்தது. ஏறக்குறைய அவர்களது உலகக் கோப்பை வாய்ப்பு அந்த இடத்திலேயே முடிந்து போய்விட்டது என்று கூறலாம்.

- Advertisement -

இந்த நிலையில் இன்று சூப்பர் சிக்ஸ் சுற்றில் முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் 181 ரன்கள் சுருண்டு, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது.

இந்தத் தோல்விக்கு பின் பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் ” முன்கூட்டியே தயாரிப்புகள் சிறப்பாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இங்கு வந்து சிறப்பாக செயல்பட முடியாது. ஒரு நாள் காலையில் எழுந்தவுடன் ஒரு பெரிய அணியாக மாறிவிட முடியாது. இன்னும் இரண்டு ஆட்டங்கள் எங்களுக்கு இருக்கிறது என்று தெரியும். நாங்கள் இதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிகளை பார்க்க வேண்டும்.

உண்மையைச் சொல்வது என்றால், நான் எந்த ஒரு தனிப்பட்ட விஷயம் குறித்தும் விரல் நீட்டி சொல்வதற்கு எதுவும் கிடையாது. நாங்கள் இந்த முழு தொடரிலும் மிகவும் கீழாகவே இருந்தோம். நாங்கள் நிச்சயமாக மீண்டும் எப்படி சரியாக ஆரம்பிப்பது என்று பார்க்க வேண்டும்.

எங்கள் நாட்டில் திறமையான வீரர்கள் இல்லாமல் கிடையாது. அவர்களிடம் இருக்கும் திறமையை வெளிக் கொண்டு வந்து, அதை நிலையான ஒன்றாக மாற்றுவதுதான் முக்கியமானது!” என்று கூறியிருக்கிறார்!