ஒவ்வொரு ஆஸ்திரேலியார்களும் இதைத்தான் விரும்புகிறார்கள்! – சதமடித்த உஸ்மான் கவஜா சிறப்பு பேட்டி!

0
132
Kawaja

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் மூன்றாவது டெஸ்டில் இருந்த அணியில் இருந்து எந்த மாற்றமும் இல்லை. இந்திய அணியில் சிராஜ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டு முகமது சமி மீண்டும் திரும்ப வந்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி வெல்லும் பொழுது நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அதே சமயத்தில் இந்தப் போட்டியை தோற்றால், நியூசிலாந்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். இந்திய அணி இந்த போட்டியில் தோற்று, இலங்கை அணி நியூசிலாந்து உடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்றால், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான வாய்ப்பில் இருந்து வெளியேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஜோடி ஹெட் மற்றும் கவாஜா 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தந்தார்கள். ஹெட் 32 ரன்னில் அஸ்வின் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் தந்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து வந்த லபுசேன் முகமது சமி பந்தில் கிளீன் போல்ட் ஆனார்.

அடுத்து வந்த கேப்டன் ஸ்மித் கவாஜா உடன் ஜோடி சேர்ந்து 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, 38 ரண்களில் ஜடேஜா பந்தில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இதற்கு அடுத்து வந்த ஹேண்ட்ஸ்கோம் 17 ரன்களில் முகமது சமி பந்தில் கிளீன் போல்டு ஆகி வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த கவாஜா மற்றும் கிரீன் மேற்கொண்டு ஆஸ்திரேலியா அணிக்கு விக்கட்டுகள் விடாமல் பார்த்துக் கொண்டதோடு, ஆஸ்திரேலியா அணிக்கு ரண்களையும் சிறப்பாக கொண்டு வந்தார்கள். மிகச் சிறப்பாக விளையாடிய உஸ்மான் கவஜா இந்தத் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார். கேமரூன் கிரீன் 49 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார். ஆஸ்திரேலியா அணி நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் முதல் நாள் முடிவில் எடுத்திருக்கிறது.

சதம் அடித்த உஸ்மான் கவாஜா முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு பின் பேசிய போது
” நிறைய உணர்ச்சிகரமானது இது. ஒரு சதத்தை பெறுவது ஒரு நீண்ட பயணம். ஒரு ஆஸ்திரேலியனாக நீங்கள் எப்போதும் இதைச் செய்ய விரும்புகிறீர்கள். இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆட்டத்தின் துவக்கத்தில் ஹெட் தாக்கி விளையாட ஆரம்பித்தார். எதிர் முனையிலிருந்து அவர் அப்படி விளையாடுவதை பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. இது ஒரு நல்ல விக்கெட்” என்று கூறினார்!

மேலும் தொடர்ந்து பேசிய உஸ்மான் கவஜா ” ஆனால் நான் என் விக்கட்டை கொடுக்க விரும்பவில்லை. இது ஒரு மிக நீண்ட மனப்போராட்டமாக எல்லாவற்றையும் விட இருந்தது. இதை நீங்கள் நீண்ட நேரத்திற்கு செய்து கொண்டே இருக்க வேண்டும். நான் சதம் அடித்த பொழுது வலது கையில் ஹெல்மெட் வைத்திருந்தேன், அப்பொழுது கிரீன் இடம் என்னை கட்டிப்பிடிக்க சொன்னேன். அவர் அதற்கு பதிலாக அழைப்பை தெரிவித்தார். எனக்கு எந்த மூடநம்பிக்கையும் இல்லை. காலையில் அப்படியே ஆட்டத்திற்கு தயாராகி வந்தேன்” என்று கூறியிருக்கிறார்!