அர்ஜுன் டெண்டுல்கர் இதைத்தான் செய்ய வேண்டும்! – பிரெட்லீ பரபரப்பான சூப்பர் ஐடியா!

0
5835
Brett Lee

கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடரில் தன் தந்தை விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த ஐபிஎல் சீசனில் அறிமுகமாகி இருக்கிறார்!

முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட்ட அவர் பஞ்சாப் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது இறுதிக்கட்ட ஓவரில் பந்து வீசி, ஒரு வைடு மற்றும் ஒரு நோபால் உடன் 31 ஒரு ரன்களை வாரி வழங்கி விட்டார்.

- Advertisement -

அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு ஓவரில் இவ்வளவு ரன்களை தந்த காரணத்தினால் அவர் மீது சமூக வலைதளத்தில் கடுமையான கேலி கிண்டல்கள் நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச அனுபவம் கொண்ட கேமரூன் கிரீன் அதே ஆட்டத்தில் 25 ரன்கள் தந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சு சாம்பியன் பவுலர் பிரட்லீ ” மக்கள் எல்லாவற்றையும் விமர்சிக்கிறார்கள். சந்திப் சர்மாவை பார்த்தால் அவர் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில்தான் வீசுகிறார். அர்ஜுன் குறைந்தபட்சமாக அதைவிட வேகமாகவே வீசுகிறார். அவருக்கு வயது 23 தான் ஆகிறது. இப்படியான சமூக வலைத்தள விமர்சனங்களுக்கு செவி கொடுக்க வேண்டாம் என்று நான் அவருக்கு ஆலோசனையாகச் சொல்லிக் கொள்கிறேன்!” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” அர்ஜுன் தன் தந்தை குறைந்த ஸ்கோரில் வெளியேறும் பொழுது எப்படி அதை கடந்து விடுவாரோ அதேபோல் இந்த நிலைமையை கடந்து விட வேண்டும். பெரிய விளக்குகள் பெரிய கூட்டத்திற்கு முன் அவரது வேகம் அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும் அவரது வேகத்தில் எனக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. அவரால் எந்த அளவிற்கு வேகமாக வீச முடியும் என்று எனக்குத் தெரியும். அவருக்கு எல்லாத் திறமைகளும் பண்புகளும் இருக்கின்றன. எனவே அவர் செய்து கொண்டிருப்பதை தொடர்ந்து செய்ய வேண்டும். சமூக வலைதள மக்களை கண்டு கொள்ளாதீர்கள் என்பதே என்னுடைய ஆலோசனை. சமூக ஊடகங்களில் விமர்சிக்கும் மக்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு பந்தை கூட வீசி இருக்க மாட்டார்கள். அவர்கள் கீபோர்ட் போர்வீரர்கள்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் அர்ஜுன் டெண்டுல்கரின் பந்துவீச்சு சிறப்பு பற்றி பேசிய அவர்
” நான் அவரது பந்துவீச்சில் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவர் மிகவும் சிறப்பான பந்துவீச்சில் ஃபார்மில் இருப்பதாக நினைக்கிறேன். புதிய பந்தில் அவருடைய பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருக்கிறது. மேலும் அவர் சிறப்பாக ஸ்விங் செய்கிறார். இது அவரது அணியில் மற்றவர்களை விட அதிகமாக இருக்கிறது. அவர் மத்திம ஓவர்களுக்கு சரியாக இருப்பார். அனுபவம் கிடைப்பதில் இருந்து அவர் இறுதிக்கட்ட ஓவர்களையும் விரும்பி வீசுவார். நான் அவருக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்!” என்று கூறியுள்ளார்!