“இதெல்லாம் தேவையே இல்லாத வேலை!” – இலங்கை வீரரை சீண்டிய சிராஜை கடுமையாக விமர்சித்த ஸ்ரீகாந்த்!

0
3523
Siraj

இன்று ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக மும்பை மைதானத்தில் தற்பொழுது விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாசை இழந்த போதிலும் முதலில் பேட்டிங் செய்ய கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி இந்திய அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது.

கில் 92, விராட் கோலி 88, ஸ்ரேயாஸ் அதிரடியாக 82 ரன்கள் எடுத்தார்கள். இலங்கை தரப்பில் இடது கை வேகப்பந்துவீச்சாளர் மதுசங்கா 10 ஓவர்களில் 80 ரன்கள் கொடுத்து ஐந்து விக்கெட் கைப்பற்றி அசத்தினார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இவரை அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் பந்து வீச வந்த இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் முகமது சிராஜ் இருவரும் இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு மீண்டும் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியை கண்முன்னே கொண்டு வந்தனர்.

பும்ரா ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் பந்தில் பதும் நிஷா வீக்கத்தை எல்பிடபிள்யு மூலம் வீழ்த்தினார். இதற்கு அடுத்து இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் கருணரத்தினே விக்கெட்டை எல்பி டபிள்யு மூலம் முகமது சிராஜ் கைப்பற்றினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் ஸ்லிப்பில் ஸ்ரேயாஸ் மூலம் சதிரா விக்கெட்டை வீழ்த்தினார்.

இதற்கு அடுத்து மீண்டும் திரும்பி வந்த முகமது சிராஜ் அவரின் இரண்டாவது ஓவரில் குசால் மெண்டிசை கிளீன் போல்ட் ஆக்கி அனுப்பினார். இந்த நேரத்தில் இலங்கை அணி மூன்று ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

- Advertisement -

மீண்டும் பும்ரா மற்றும் முகமது சிராஜ் இருவரும் பந்துவீச்சில் கடுமையான தாக்குதலை தொடுத்தார்கள். ஆனால் இவர்களது ஓவரில் விக்கெட்டுகள் வரவில்லை.

இந்த நிலையில் தனது நான்காவது ஓவரை முகமது சிராஜ் வீசிய பொழுது பேட்டிங் முனையில் சரித் அசலங்கா இருந்தார். அவருக்கு ஷார்ட் பந்தை வீசிவிட்டு அவரிடம் சென்று சிராஜ் ஏதோ பேசினார். மீண்டும் ஒரு பந்தை வீசிவிட்டு மீண்டும் சென்று அவரிடம் ஏதோ பேசினார். ஆனால் அதை சரிth அசலங்கா பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்து கடந்து விட்டார்.

அப்போது கிரிக்கெட் வர்ணனையில் இருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “இது தேவையே இல்லாத வேலை சிராஜ். நல்ல முறையில் பந்து வீசிக் கொண்டிருக்கும் பொழுது அதையே தொடர்ந்து செய்வதுதான் சரி. பும்ராவை எடுத்துக் கொண்டால் மிகவும் நாகரிகமாக பந்துவீச்சில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். முகமது சமியும் அப்படியே.

இப்படி செய்வது எல்லா நாளும் நமக்கே பலன் அளிக்காது. ஒரு நாள் இது நமக்கே திரும்பி வரும். கிரிக்கெட்டை பொருத்தவரை நம்முடைய வேலை என்னவோ அதை மட்டுமே நாம் செய்ய வேண்டும். தேவையில்லாமல் எதிரணி வீரர்களை தீண்டுவது தவறான போக்கு!” என்று கூறியிருக்கிறார்!