2023 உலகக் கோப்பையில் இந்த இந்திய இளம் வீரர்தான் விளையாடுவார் – யுவராஜ் சிங் கணிப்பு!

0
900
Yuvraj singh

2023 ஆம் ஆண்டின் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கான துவக்க வீரராக சுப்மண் கில் ஆடுவார் என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல் ரவுண்டரும் உலகக்கோப்பை நாயகனுமான யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார் . இந்திய அணியில் துவக்க வீரராக ரோஹித் சர்மா உடன் யார் ஆடுவார் என்ற போட்டி நிலவி வருகிறது . இது குறித்து பேசிய யுவராஜ் சிங் , துவக்க வீரர்க்கான போட்டியில் சுப்ஹ்மன் கில் தான் முன்னணியில் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார் .

இந்தியா டுடே வின் இணைய பக்கத்திற்கு அளித்துள்ள பேட்டியில் யுவராஜ் சிங் கில்லை வெகுவாக பாராட்டி பேசினார் . சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முதல் போட்டியில் அரை சதம் அடித்த கில் இரண்டாவது போட்டியிலும் சிறப்பாக ஆடி 45 ரன்கள் எடுத்திருந்தார். 2022 ஆம் ஆண்டில் 12 போட்டிகளில் ஆடி உள்ள கில் 638 ரன்கள் எடுத்துள்ளார் இதில் நான்கு அரை சதங்களும் ஒரு சதமும் அடக்கம் . ஒரு நாள் போட்டிகளில் இவரது சராசரி 70.88 ஆக உள்ளது .

சுப்ஹ்மன் கில் பற்றி பேசிய யுவராஜ் சிங் ” ஒரு நாள் போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் நிச்சயமாக வருகின்ற உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு துவக்க வீரராக அவர் ஆடுவார் “என்று தான் நம்புவதாக தெரிவித்தார் ,

யுவராஜ் சிங் 2019 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின் இளம் வீரர்களுக்கு பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் இருந்து வருகிறார் .. 2020 ஆம் ஆண்டு கோவிட் ஊரடங்கின் போது யுவராஜ் சிங் உடன் கில் மற்றும் பஞ்சாப் அணியின் கேப்டனும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல் ரவுண்டருமான அபிஷேக் ஷர்மாவும் பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் பேசிய யுவராஜ் சிங் ” சுப்ஹ்மன் கில் ஒரு சிறந்த வீரர் மட்டுமல்ல அவர் கடினமாக உழைக்கக்கூடிய வீரர் எல்லா விஷயங்களையும் சரியாக செய்து வருகிறார் அடுத்த பத்து ஆண்டுகளில் உலகின் சிறந்த பேட்ஸ்மனாக அவர் உருவெடுப்பார் ” என்றும் கூறினார் , இந்திய அணியின் டி20 உலக கோப்பை தோல்வி பற்றி கருத்து கூற மறுத்துவிட்டார் ..