இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் இந்திய கிரிக்கெட்டில் இந்த காலகட்டத்தில் மிகவும் முக்கியமான தொடராக இருக்கிறது. புதிய வீரர்கள் புதிய கேப்டன் மற்றும் புதிய பயிற்சியாளர் என புதிய பரிணாமத்தில் இந்திய கிரிக்கெட் ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் இது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா சிறப்பு பேட்டி கொடுத்திருக்கிறார்.
கடந்த மாதத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. அந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற பிறகு இந்திய அணியின் தூண்களாக இருந்து வந்த விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா என மூன்று பெரிய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்கள்.
மேலும் வீரர்களை மிகச் சிறந்த முறையில் வழிநடத்தி மிகச்சிறந்த அணுகுமுறையை அணிக்கு கொடுத்த தலைமை பயிற்சியாளர் இந்திய லெஜெண்ட் ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிவுக்கு வந்து பொறுப்பில் இருந்து விலகினார்.
இதைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றார். டி20 அணிக்கு சூரிய குமார் கேப்டனாக கொண்டுவரப்பட்டார். மேலும் டி20 ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணிகளுக்கு துணை கேப்டனாக சுப்மன் கில் கொண்டுவரப்பட்டார். ரியான் பராக் போன்ற இளம் வீரருக்கு எதிர்காலம் கருதி தொடர வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது.
தற்பொழுது இந்த புதிய ஆரம்பத்தை பற்றி இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேசும்பொழுது “அற்புதமான மாதமாக அமைந்தது. பல சிறப்பான நினைவுகள் இருக்கின்றன. வரலாற்றில் பொறிக்கப்பட்ட தருணங்கள் அமைந்திருக்கின்றன. இது எப்பொழுதும் நம்முடன் இருக்கும். மிகக் குறுகிய வடிவ கிரிக்கெட்டில் நான் எப்பொழுது வேண்டுமானாலும் விளையாட முடியும். எனக்கு அதில் கிடைத்த நேரத்தை ரசித்தேன். தற்பொழுது முன்னோக்கி செல்ல வேண்டிய நேரம் இது.
இதையும் படிங்க : 640 நாள் ஆகுது.. திறமையான அவருக்கு டி20 அணியில் மீண்டும் இடம் தரல.. முன்னாள் இந்திய வீரர் வருத்தம்
ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்துடன் நாங்கள் மீண்டும் களம் இறங்க வேண்டிய காலம் இது. புதிய பயிற்சியாளர் உடன் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி நகர்த்தும் ஒரு புதிய பார்ட்னர்ஷிப் இது. ரீசெட் பட்டனை அழுத்த வேண்டிய நேரம். நாங்கள் பழைய அதே ஆற்றல் புதிய மற்றும் பழைய முகங்களுடன் களத்தில் இறங்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். இது உங்கள் டீம் இந்தியா நான் உங்கள் கேப்டன் ரோஹித் சர்மா” என்று கூறியிருக்கிறார்.






