640 நாள் ஆகுது.. திறமையான அவருக்கு டி20 அணியில் மீண்டும் இடம் தரல.. முன்னாள் இந்திய வீரர் வருத்தம்

0
397

இந்திய கிரிக்கெட்டில் குறுகிய கால இடைவெளிக்கு பிறகு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மூலம் நட்சத்திர பேட்ஸ்மேன் கே எல் ராகுல் இந்திய அணிக்கு திரும்பியிருக்கிறார்.

இந்த நிலையில் கே எல் ராகுல் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோட்டா கணேஷ் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர பேட்ஸ்மேனாக விளங்கிய கேஎல் ராகுல் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என அனைத்திலும் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கி வந்தார். 2022ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் கே எல் ராகுல் விளையாடினாலும் கடைசியாக நடைபெற்ற டி20 உலக கோப்பையில் கே எல் ராகுல் இந்திய அணிக்கு இடம் பெறவில்லை. இதற்கு இடையில் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் கே.எல் ராகுல் தனது சுமாரான பங்களிப்பையே வெளிப்படுத்தினார்.

ஐபிஎல் தொடரில் விளையாடும் போது பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிக்காக தனது ஆக்ரோஷமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே எல் ராகுல் சமீபத்தில் சில ஆண்டுகளாக தனது பேட்டிங் ஆக்ரோசத்தை குறைத்து குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வந்ததால் இதுபலர் இடையே விமர்சனத்தை ஏற்படுத்தி வந்தது. தொடக்க வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடாமல் தனது விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ள மெதுவாக விளையாடுகிறார் என்றும் கூறப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தோட்டா கணேஷ் கூறும் போது “கே எல் ராகுல் டி20 கிரிக்கெட்டில் தனது அணுகுமுறையை மாற்றினால் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி தனது சிறந்த பேட்டிங் பங்களிப்பினை வெளிப்படுத்த முடியும். டி20 கிரிக்கெட்டில் ஒரு நல்ல திறமைசாலி இருந்தும் அவரை வெகு காலமாக மிஸ் செய்கிறோம். எனவே டி20 அணுகுமுறையை மாற்ற வேண்டியது அவசியம்” என்று கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரோஹித் சர்மா பேசும்போது விக்கெட் கீப்பரை தேர்வு செய்யும் போது தனக்கு ஏற்படும் சிரமத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இருவருமே சிறந்த பேட்மேன்கள். அவர்கள் இருவரும் தனது வழியில் விளையாடக்கூடிய சிறந்த வீரர்கள். எனவே இவர்கள் இருவரில் ஒருவரை தேர்வு செய்வது கடினமான விஷயம்.

இதையும் படிங்க:சூப்பர் ஓவருக்கே போயிருக்க கூடாது.. அவர் சொன்னதைதான் செஞ்சேன் தப்பா ஆயிடுச்சு – ஜெயசூர்யா வருத்தம்

ஆனால் இது மகிழ்ச்சியான விஷயமும் கூட என்று கூறி இருக்கிறார். கடைசியாக விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிராக 2022 ஆம் ஆண்டு டி20 போட்டியில் விளையாடினார். சரியாக இந்திய அணியில் அவரிடம் பிடித்து 640 நாட்கள் ஆகிறது. எனவே இலங்கை அணி எதிரான ஒரு நாள் தொடர் தனது திறமையை மீண்டும் வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -