“விராட் கோலிக்கு இதே வேலையா போச்சு” – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம்!

0
6124
Manjrekar

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது!

டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்து வலிமையான துவக்கத்தைப் பெற்றது. ஸ்மித் மற்றும் ஹெட் இருவரும் அபாரமான சதங்களை அடித்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து விளையாடிய இந்திய அணி 38 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் இக்கட்டான நிலையில் தற்போது நிற்கிறது.

இந்தப் போட்டியில் இந்திய பேட்டிங்கில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஸ்டார்க் பந்து வீச்சில் ஸ்லீப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதுகுறித்து விமர்சனம் செய்துள்ள சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறுகையில்
“விராட் கோலிக்கு வீசப்பட்ட பந்து குறித்து நிறைய பேசப்படுகிறது. நான் பிட்ச் வரைபடத்தைப் பார்த்தேன். உண்மையிலேயே பந்து ஷார்ட் லென்த்தில்தான் பிட்ச் ஆகி இருந்தது.

- Advertisement -

இது ஒரு ஷார்ட் பால். நான் இரண்டு மூன்று வருடங்களாக விராட் கோலியை பார்க்கிறேன் அவர் இப்படியான பந்துகளுக்கு தன்னுடைய முன்காலிலேயே நிற்கிறார். இது அவருக்குப் பிரச்சனையாக இருந்து வருகிறது.

அது ஒரு ஷார்ட் பால் ஆனால் அந்த இடத்தில் இருந்து துரதிஷ்டவசமாக கொஞ்சம் பவுன்ஸ் ஆனது. ஆனால் அவரது முன்கால் மட்டும் இன்றி பின்காலும் கிரீசுக்கு வெளியே இருக்கிறது. மேலும் அவர் பந்தை விளையாடவும் பார்க்கிறார். இதனால் நிலைமை சிக்கலாகிறது!” என்று கூறியுள்ளார்.

மேலும் விராட் கோலி ஆட்டம் இழந்தது குறித்து பேசி உள்ள கவாஸ்கர் “இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு பவுன்சர்கள் மட்டுமே வீச முடியும் என்பதால் பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் முன்காலிலேயே நிற்கிறார்கள்.

இதனால் இப்படியான பந்துகளுக்கு பேக் புட்டில் போய் மணிக்கட்டை தளர்த்தி பந்தை விடுவதற்கு அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. விராட் கோலிக்கும் இதே பிரச்சனைதான்!” இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.