தோனி இருந்த பொழுது விராட் கோலி நிம்மதியாக இருந்தார் காரணம் இதுதான் ; விராட் கோலி இளம் வயது பயிற்சியாளர் பரபரப்பான கருத்துக்கள்!

0
279
Virat kohli

நேற்று முன்தினம் ஆர்சிபி அணிக்காக பாட்காஸ்டில் விராட் கோலி நிறைய முக்கியமான விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் வீரருமான மகேந்திர சிங் தோனிக்கும் தனக்குமான நட்பு குறித்து பல விஷயங்களை கூறியிருந்தார்.

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தான் விலகிய பொழுது தனக்கு வந்த ஒரே அழைப்பு மகேந்திர சிங் தோனியிடம் இருந்துதான் என்றும், மகேந்திர சிங் தோனி தனக்கு ஒரு மூத்த சகோதரர் போலவும், அவரை யாராலும் அவ்வளவு எளிதில் தொடர்பு கொள்ள முடியாது என்றும் நிறைய தகவல்களை கூறியிருந்தார்.

- Advertisement -

விராட் கோலியின் இந்த கருத்துக்களுக்கு இடையே தன்னை மற்றவர்கள் வெற்றிகரமான கேப்டன் இல்லை என்று உலகக் கோப்பையை வெல்லாத காரணத்தால் நினைக்கிறார்கள் ஆனால் அது உண்மை இல்லை, எனது தலைமையில் அணி ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டி மற்றும் அரையறுதி போட்டிகளுக்கு முன்னேறி உள்ளது என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சிங் மகேந்திர சிங் தோனிக்கும் விராட் கோலிக்கும் இடையே இருந்த நட்பும் புரிதலும் எப்படியானது என்று பேசி இருக்கிறார்.

இது பற்றி அவர் கூறும் பொழுது
” விராட் கோலி எப்பொழுதும் மகேந்திர சிங் தோனியை மதிக்கிறார். அவரை தன் மூத்த சகோதரராக கருதுகிறார். தோனி விராட் கேப்டன்ஷியில் விளையாடிய பொழுது இறுதிக்கட்ட ஓவர்களில் நீண்ட நேரம் நின்று விளையாடியதை நாம் பார்த்தோம். அதேபோல் விராட் தனது கேப்டன்ஷியில் வெளிவட்டத்தில் சென்று பீல்டிங் செய்வார். ஏனென்றால் அணியை வழிநடத்த தனது மூத்த சகோதரராக தோனி அந்த இடத்தில் இருக்கிறார் என்று அவருக்கு தெரியும். இதுதான் அவரை வெளிவட்டத்தில் ஃபீல்டிங் செய்ய அனுமதித்தது. மற்றவர்கள் அவரைக் குறி வைத்த பொழுது தோனி அவரை ஆதரித்த விதத்திற்கு நான் அவரை பெரிதும் பாராட்டுகிறேன்” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” விராட் கோலியின் மிகப்பெரிய சாதனை இந்திய கிரிக்கெட் அணியில் உடல் தகுதி கலாச்சாரத்தை மாற்றியது. அவர் கேப்டனாக இருந்த பொழுது அணி இந்த விஷயத்தில் மிகவும் தகுதி வாய்ந்ததாக இருந்தது. அவர் இதை முதலில் செய்ததோடு தானே இதற்கு உதாரணமாக இருந்து முன் நின்று வழிநடத்தினார். அதற்கு முன்னதாக வீரர்கள் எடையை தூக்கும் பயிற்சியெல்லாம் செய்ததே கிடையாது! என்று கூறியிருக்கிறார்!

விராட் கோலி இந்திய அணிக்காக 68 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து அதில் 40 வெற்றிகளை பதிவு செய்து, தனது கேப்டன் மகேந்திர சிங் தோனியை விட 13 அதிக வெற்றிகளை குவித்தவர் ஆக இருக்கிறார். அதே சமயத்தில் உலக டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் கிரீன் ஸ்மித், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் ஆகியோர்களுக்கு பின்பு அதிக வெற்றிகளை குவித்தவர் விராட் கோலிதான் என்பது குறிப்பிடத்தக்கது!