“இந்த காரணத்தால் விராட் கோலியின் ஆட்டம் வீழ்ச்சி அடைந்து இருக்கலாம்” – முன்னாள் வீரர் கருத்து!

0
451

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற வெள்ளிக்கிழமை டெல்லியில் வைத்து நடைபெற இருக்கிறது . இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் முனைப்பு காட்டும் .

ஆஸ்திரேலியா அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரி சமன் செய்ய முயற்சிக்கும் . இதன் காரணமாக இந்த போட்டி பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . . இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் ரோஹித் சர்மா ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்தனர் . சுஜாதா மற்றும் விராட் கோலி ஆகியோர் முதல் டெஸ்ட் போட்டியில் சரியாக ஆடவில்லை .

- Advertisement -

மேலும் விராட் கோலி சமீபகாலமாகவே டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வருகிறார் . இறுதியாக அவர் 2019 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இது பற்றி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தனது கருத்தை தெரிவித்துள்ளார் . மேலும் இது பற்றி அவர் கூறும் போது எல்லா வீரர்களும் சர்வதேச போட்டிகளை விளையாடுவதற்கு முன் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் இந்திய ஆடுகளங்களில் அதிகமான போட்டிகளை ஆடுவதால் சுழல் பந்துவீச்சை திறமையாக ஆடும் வீரர்களாக இருக்கின்றனர் .

ஆனால் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டை ஆட துவங்கும் போது அதிகப்படியான வேகப்பந்துவீச்சை சந்தித்து ஆட வேண்டி உள்ளது . இதன் காரணமாக அவர்களது சுழற்சிக்கு எதிரான பேட்டிங் சற்று தோல்வியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் .

இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் விராட் கோலியின் தனது கிரிக்கெட் வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக திறமையான ஆட்டம் முறையை கொண்டிருந்தார் . தொடர்ந்து அதிகப்படியான வெளிநாடுகளில் கிரிக்கெட் போட்டிகளை ஆடியதன் மூலம் சிலர் பந்துவீச்சுக்கு எதிரான அவரது ஆட்டத்தில் சிறிய சறுக்கல் ஏற்பட்டுள்ளது . ஆனால் அவரால் இதை சரி செய்து கொண்டு மீண்டும் திறம்பட விளையாட முடியும் எனக் கூறினார் .

- Advertisement -

இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் விராட் கோலி தனது ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான எல்லா திறமைகளும் அவரிடம் இருக்கின்றன . நிச்சயமாக அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் தனது பழைய ஃபார்மிற்கு வருவார் என்று உறுதியாக கூறினார் .