20வது ஓவரை முகேஷ்க்கு பதிலாக ஜோர்டனுக்கு கொடுத்ததற்கான காரணம் – கேப்டன் ஜடேஜா விளக்கம்

0
381
Chris Jordan and Ravindra Jadeja

நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இறுதி நேரத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்ராஜ் 48 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட 73 ரன்கள் குவித்தார்.

பின்னர் விளையாடிய குஜராத் அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பொழுதிலும், பின்னர் டேவிட் மில்லர் மற்றும் ரஷீத் கான் உதவியுடன் இறுதி நேரத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் 51 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்சர் உட்பட 94* ரன்கள் குவித்து இறுதிவரை டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -
கடைசி ஓவரை கிரிஸ் ஜோர்டனுக்கு கொடுத்த காரணம் இதுதான்

நேற்றைய போட்டியில் சென்னை அணி தோல்வி பெற்றதும் சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். நாங்கள் முதலில் பேட்டிங் விளையாடி முடித்த பின்னர் இறுதி நேரத்தில் மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது எனவே 169 ரன்கள் எங்களுக்கு போதுமானதாக இருந்தது என்று நாங்கள் அனைவரும் நம்பினோம்.

அதன்படியே முதல் 6 ஓவர்கள் நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். 3 விக்கெட்டுகளை முதல் 6 ஓவர்களில் எங்களால் கைப்பற்ற முடிந்தது. 10 ஓவர்களுக்கு மேல் போட்டி குஜராத் அணி பக்கம் திரும்ப ஆரம்பித்தது. நேற்றைய போட்டியில் டேவிட் மில்லர் மிக அற்புதமாக பேட்டிங் விளையாடினார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் எங்களது அணி கடைசி 5 ஓவர்களில் சிறப்பாக பந்து வீசவில்லை. குறிப்பாக அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் நேற்று நாங்கள் எதிர்பார்த்த வகையில் பந்து வீசவில்லை. பொதுவாகவே அவர் ஒரு ஓவரில் 4 அல்லது 5 யார்க்கர் பந்துகள் ஆனால் நேற்று அது எதிர்பார விதமாக நடைபெறவில்லை. அவர் மீது நம்பிக்கை வைத்த காரணத்தினாலையே கடைசி ஓவரை அவருக்குக் கொடுத்தோம்.

இது டி20 கிரிக்கெட் போட்டி, இதில் எதிர்பாராத விஷயங்கள் நிறைய நடைபெறும். அதேபோன்றுதான் நேற்றைய போட்டியிலும் நடைபெற்றது. நாங்கள் எண்ணிய முடிவு இறுதியில் எங்களுக்கு கிடைக்காமல் போனது. இவ்வாறு ரவீந்திர ஜடேஜா நேற்று போட்டி முடிந்ததும் தோல்வி குறித்த காரணத்தை பகிர்ந்து கொண்டார்.

சமூக வளைதளத்தில் ரசிகர்கள் கடைசி ஓவரை முகேஷ் சவுத்ரியிடம் கொடுத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்கள். நேற்றைய போட்டியில் மூன்று ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கைப்பற்றி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். ஒருவேளை ரசிகர்கள் கூறும் விதத்தில் கடைசி ஓவர் முகேஷிடம் கொடுக்கப்பட்டு இருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கலாம்.

6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு வெற்றி மற்றும் 5 தோல்வியுடன் ஏழாவது இடத்தில் தற்போது உள்ளது. அந்த அணியினுடைய அடுத்த போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வருகிற 21-ஆம் தேதி அன்று வர இருக்கின்றது.

- Advertisement -