“நாக் அவுட் போட்டிகளில் இந்தியா தோற்பதற்கு காரணம் இதுதான்” – கங்குலி கண்டுபிடிப்பு!

0
500
Ganguly

இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் முதல் முறையாக முழுமையாக ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணைகள் சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் அக்டோபர் ஐந்தாம் தேதி நியூசிலாந்து இங்கிலாந்து அணிகளுக்கு இடையே துவங்குகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.

- Advertisement -

இந்தியா இந்த முறை தனது சொந்த நாட்டில் ஒரு உலகக்கோப்பை தொடரை விளையாட இருப்பதால் வெல்ல வேண்டிய அழுத்தம் இந்திய அணிக்கு மற்ற அணிகளை விட கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. ஏனென்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிக அளவில் இருக்கிறது.

இது மட்டும் அல்லாமல் ஒரு உலகக் கோப்பை தொடரை கடைசியாக வென்றது மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்தியாவில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 2011ல் வென்ற போதுதான். 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஐசிசி சாம்பியன் டிராபி தொடரை இந்தியா வென்று இருந்தது. அதற்குப் பிறகு உலக கோப்பை ஐசிசி தொடர் என்று எதையும் இந்தியா வெல்லவில்லை.

அதிலிருந்து தொடர்ச்சியாக இந்தியா நாக்கவுட் போட்டிகளில் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியாமல் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. அது நாளடைவில் இந்திய அணியின் பழக்கமாகவே மாறிவிட்டதாக இருக்கிறது. இது குறித்து இந்தியாவின் மீதான விமர்சனங்கள் பரவலாக இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்தும் உலகக்கோப்பை குறித்தும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி சில முக்கியமான விஷயங்களை தெளிவாக பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது
“நாங்கள் சில நேரங்களில் முக்கியமான கட்டங்களில் சிறப்பாக செயல்படவில்லை. நான் இதற்கு மன அழுத்தம் காரணம் என்று நினைக்கவில்லை. திறமைகளை திட்டங்களை ஒருங்கிணைப்பதில் இருக்கின்ற பிரச்சனை தான் காரணம் என்று நினைக்கிறேன். இந்திய அணியினர் மனதளவில் வலிமையானவர்கள். எனவே அவர்கள் இந்த கடினமான காலகட்டத்தில் இருந்து வெளியே வருவார்கள் என்று நம்புகிறேன்.

உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்று எப்பொழுதும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஏனென்றால் குறைந்தபட்சம் நாங்கள் டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் போன்ற பெரிய தொடர்களில் இறுதி போட்டிக்கு செல்கிறோம். எங்களிடம் நிறைய நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். இந்த அளவிற்கு நாங்கள் இருப்பதால் எங்களால் உலக கோப்பையை வெல்ல முடியாமல் இல்லை.

ரோகித் சர்மாவால் உலக கோப்பையை கேப்டனாக வெல்ல முடியும். அவர் ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று இருக்கிறார். ஐபிஎல் கோப்பைகளை வெல்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. எனவே இந்த முறை உலக கோப்பையில் அவரால் இதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்!” என்று மிக உறுதியாக கூறியிருக்கிறார்!