“நான் பேட்டை தூக்கி எறிந்து செலிப்ரேட் பண்ண காரணம் இதுதான்” – ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா மனம் உருகி பேட்டி!

0
1217

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 393 ரண்களுக்கு 8 விக்கெட் இழந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

இதனைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா துவக்கத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்தாலும் அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா மிகச் சிறப்பாக ஆடி சதம் எடுத்தார் . அவருக்கு துணையாக நின்று ஆடிய ட்ராவஸ் ஹெட் அரை சதம் எடுத்தார் . இவர்கள் இருவரது சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி சர்வில் இருந்து மீண்டு வலுவான நிலைக்கு திரும்பியது .

- Advertisement -

50 ரன்கள் ஹெட் ஆட்டம் இழந்த பிறகு அவரைத் தொடர்ந்து ஆட வந்த கிரீன் 38 ரண்களில் ஆட்டம் இழந்தார் அதன் பிறகு உஸ்மான் கவாஜா உடன் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி சிறப்பாக ஆடி அரை சதம் எடுத்தார் . இவர்கள் இருவரது சிறப்பான ஆட்டத்தினால் நேற்றைய ஆட்டு நேரம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 311 ரண்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது.உஸ்மான் கவாஜா 126 ரன்கள்டனும் அலெக்ஸ் கேரி 52 ரன்கள்டனும் களத்தில் இருந்தனர் .

உஸ்மான் கவாஜா நேற்றைய போட்டியில் அடித்த சதம் இங்கிலாந்தில் அவர் எடுக்கும் முதல் டெஸ்ட் சதமாகும் . மேலும் ஆஸ்திரேலியா அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது அணியை சரிவிலிருந்து மீட்டு வலுவான நிலைக்கு எடுத்து வந்திருக்கிறார் . இந்தப் போட்டியில் அவர் சதம் எடுத்த கொண்டாட்டத்தின் போது பேட்டை தூக்கி எறிந்து தன்னுடைய சதத்தை கொண்டாடினார் . போட்டி முடிந்ததற்கு பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார் உஸ்மான் கவாஜா .

தன்னுடைய செலிப்ரேஷன் பற்றி பேசிய அவர் ” அது ஒரு உணர்ச்சிப்பூர்வமான தருணமாக இருந்தது . ஏன் அப்படி கொண்டாடினேன் என்று என்னால் விளக்கிக் கூற முடியவில்லை கடந்த மூன்று முறை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி இருக்கிறேன் . அந்தத் தொடர்களின் போது இரண்டு முறை என்னை அணியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் . ஏராளமான விமர்சனங்களுக்கு உள்ளானேன் . நான் அதிகமாக செய்திகளை படிப்பதில்லை இருந்தாலும் ஒவ்வொரு முறை விளையாட வரும் போதும் மற்றும் பயிற்சிக்கு செல்லும்போதும் இங்கிலாந்தில் என்னால் ரண்களை எடுக்க முடியவில்லை என ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர் . அதனால் இந்த சதம் எனக்கு உணர்வுபூர்வமான ஒன்றாக இருந்தது” என்று தெரிவித்தார்

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நான் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை இருந்தாலும் ஆஸ்திரேலியா அணிக்காக ரண்களை குவிப்பது என்பது சிறப்பான ஒரு அனுபவம் . மேலும் என்னுடைய 10 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை என்பது ஏதோ அதிர்ஷ்டத்தால் வந்தது இல்லை என்பதை அனைவருக்கும் காட்டுவதற்கு எனக்கு கிடைத்த ஒரு தருணமாக கருதுகிறேன்’ என்று தெரிவித்தார்.