மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக்கை, ஓபனிங் இறக்கவேண்டும் என்று பிளான் பண்ணியது எப்படி? – கேப்டன் எய்டன் மார்க்ரம்!

0
662

வழக்கமாக மிடில் ஆர்டரில் இறங்கும் ஹாரி ப்ரூக்கை ஓபனிங் இறங்க வைத்தது எப்படி? என்று கேப்டன் எய்டன் மார்க்ரம் பதில் கூறியுள்ளார்.

கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய லீக் போட்டியில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 228 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணிக்கு ஓபனிங் இறங்கிய ஹாரி புரூக், பவுண்டரி சிக்ஸர்களாக விளாசி இந்த சீசனின் முதல் சதத்தை அடித்தார். 55 பந்துகளில் 100 ரன்கள் அடித்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார்.

- Advertisement -

கடினமான இந்த இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு ஆரம்பத்தில் விக்கெட்டுகள் சரிந்தன. அதன் பின்னர் ஜெகதீசன் 36 ரன்கள் அடித்து அவுட் ஆனார். நித்திஷ் ரானா அபாரமாக விளையாடி 75 ரன்கள் குவித்து அவுட்டானார்.

கடந்த போட்டியில் கொல்கத்தா அணிக்காக கலக்கிய ரிங்கு சிங், இந்த போட்டியிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 229 ரன்கள் இலக்கை எட்டமுடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 205 ரன்கள் அடித்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

வழக்கமாக சர்வதேச போட்டிகளிலும், மற்ற நாடுகளில் நடந்த லீக் போட்டிகளிலும் ஹாரி புரூக் மிடில் ஆர்டரில் களமிறங்கி சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடிய போது முற்றிலும் மாறுபட்ட விதமா ஓப்பனிங் இறங்க வைக்கப்பட்டார். இந்த திட்டம் முதல் போட்டியில் சரியாக ஈடுபடவில்லை என்றாலும் கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த போட்டியில் நன்றாக எடுபட்டது. அதுதான் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது.

- Advertisement -

போட்டி முடிந்த பிறகு இது குறித்து பேட்டி அளித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறுகையில், “சர்வதேச கிரிக்கெட்டில் ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி ரன்குவித்த விதத்தை நானும் பார்த்து வியந்தேன். இவர் அதிகமாக வேகப்பந்துவீச்சு மைதானங்களில் விளையாடியுள்ளார். இந்தியாவில் சுழல் பந்துவீச்சு தான் நிறைய ஈடுபடும். ஆகையால் இவரை ஓப்பனிங் இறக்கிவிட்டால் கூடுதல் நேரம் பேட்டிங் செய்து நிறைய பந்துகள் பிடிப்பார். வேக பந்துவீச்சாளர்களையும் எதிர்கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் அணிக்கும் வேகமாக ரன் வரும் என்கிற அடிப்படையில் இறக்கினோம். இது நல்ல பலனையும் கொடுத்திருக்கிறது.” என்றார்.