இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியின் கடைசி நேரத்தில் திடீரென வெளியேறிய டீ காக் – காரணம் இதுதான்

0
133

இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் டி20 போட்டியில் தென்ஆப்ரிக்க அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், இன்று இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்க.ள் உள்ளனர்.

இரண்டாவது போட்டியிலிருந்து வெளியேறல்

விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் டீ காக் காயம் காரணமாக வெளியேறியுள்ளார். அதேபோல ஸ்டப்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் பதிலாக கிளாஸன் மற்றும் ஹென்றிக்ஸ் ஆகியோர் அணியில் இன்று இணைக்கப்பட்டுள்ளனர்.

மறுபக்கம் இந்திய அணி அதே 11 வீரர்களுடன் இன்று போட்டியில் களம் இறங்கியுள்ளத. இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், “நாங்கள் அதை அணியுடன் களமிறங்க இருக்கிறோம். எங்களுடைய முந்தைய போட்டியில் இருந்த தவறுகளை தேதி இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாட விரும்புகிறோம் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா ஏ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது அதன்படி தற்பொழுது இந்திய அணி முதலில் பேட்டிங் விளையாடிக் கொண்டிருக்கிறது. இரண்டு ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு இந்திய அணி தற்போது 11 ரன்கள் எடுத்துள்ளது. ருத்ராஜ் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்துள்ளார்.