எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம்- கேப்டன் ரோஹித் சர்மா கருத்து!

0
12959
Rohitsharma

ஆஸ்திரேலியாவில் நடந்த வரும் எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று சிட்னி மைதானத்தில் நியூசிலாந்து பாகிஸ்தான் அதிகம் மோதிய முதல் அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது!

இன்று அடிலைடு மைதானத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்து கொண்டது.

- Advertisement -

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இந்த ஆட்டத்திலும் நல்ல துவக்கத்தை இந்திய அணிக்கு தரவில்லை. சூரியகுமார் இந்த ஆட்டத்தில் 14 ரன்களோடு வெளியேறினார். ஆனால் ஒரு முனையில் விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதங்கள் அடித்து இந்திய அணியை 168 என்ற நல்ல இலக்கை எட்ட வைத்தார்கள்.

இதற்குப் பிறகு களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜாஸ் பட்லர் 80, அலெக்ஸ் ஹேலஸ் 86 இருவரும் ஆட்டம் இழக்காமல் அதிரடியாக விளையாடி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வெல்ல வைத்து இறுதிப் போட்டிக்கு வெற்றிகரமாக அழைத்துச் சென்றனர்!

இந்த ஆட்டத்தின் தோல்விக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ” இன்று நாங்கள் விளையாடிய விதம் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த ஸ்கோரை ஏற்றுவதற்கு நாங்கள் ஆட்டத்தில் இரண்டாவது பகுதியில் நன்றாக பேட் செய்தோம் என்று நினைக்கிறேன். ஆனால் நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்படவில்லை. ஒரு அணியால் இந்த ஸ்கோரை 16 ஓவர்களில் விரட்டும் அளவுக்கு இந்த விக்கெட் அவ்வளவு மோசமானது இல்லை. நாக் அவுட் போட்டிகள் என்று வரும் பொழுது அழுத்தத்தைக் கையாளுவது தான் முக்கியம். அழுத்தத்தை கையாள நாம் யாருக்கும் தனியாகச் சொல்லிக் கொடுக்க முடியாது. ஐபிஎல் போன்ற பெரிய தொடரில் ப்ளே ஆப்ஸ் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் தான் இவர்கள் ” என்று கூறினார்…

- Advertisement -

தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா
” பந்துவீச்சில் நாங்கள் தொடங்கிய விதம் சரியில்லை. நாங்கள் கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தோம். ஆரம்பத்தில் பந்து நல்ல முறையில் ஸ்விங் ஆகியது. ஆனால் சரியான ஏரியாவில் புவனேஸ்வர் குமார் பந்து விழவில்லை. அதே சமயத்தில் இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களுக்கான சிறப்பை கொடுக்க வேண்டும். மைதானத்தின் இரண்டு பக்கங்கள் சிறியவை என்பதால் அவற்றை எங்கள் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினோம். பேட்ஸ்மேன்கள் அடிப்பதற்கு இடம் தராமல் பந்துவீச்சை அமைக்க விரும்பினோம். ஆனால் நாங்கள் அதில் சிறப்பாக செயல்படவில்லை. ரன்கள் அந்த இடத்தில் தான் போனது. இதே மைதானத்தில் பங்களாதேஷ் அணியுடன் நாங்கள் சரியாக செயல்பட்டோம் ஆனால் இந்த ஆட்டத்தில் அப்படி நடக்கவில்லை!” என்று கூறியிருக்கிறார்!