“எங்க தோல்விக்கு காரணம் இதுதான்.. இல்லனா ஜெயிச்சிருப்போம்!” – சமி ஓபன் ஸ்பீச்!

0
2153
Shami

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு, தோல்வி குறித்து இந்திய வீரர்கள் தங்களுடைய ஏமாற்றத்தை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறார்கள்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ட்பிரித் பும்ரா இவர்கள் மட்டுமே உலகக்கோப்பை தோல்வி குறித்து இதுவரை பேசாத இந்திய வீரர்களாக இருந்து வருகிறார்கள்.

- Advertisement -

நேற்று பேசி இருந்த முகமது சமி பல விஷயங்களை மனம் திறந்து கூறி இருந்தால். அதில் மிக முக்கியமாக இந்திய கிரிக்கெட் வாரியத்தை பற்றி வெளியிலிருந்து குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து பேசிய அவதூறுகளுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

மேலும் இந்த தோல்வி மனதை உடைத்து இருந்தாலும் கூட, இந்திய அணி செயல்பட்ட விதத்தில் தான் பெருமை கொள்வதாக பேசி இருந்தார். இதிலிருந்து ஒட்டுமொத்த அணியும் வெளியில் வரவேண்டிய தேவை குறித்தும் கூறி இருந்தார்.

நடந்து முடிந்த உலக கோப்பையில் மிகவும் கவனிக்கத்தக்க வீரராக முன்னணியில் இருந்தவர் முகமது சமிதான். அவருடைய பந்துவீச்சு வேகப்பந்து வீச்சின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் கொண்டதாக இருந்தது. அவர் கையில் பந்து இருந்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எல்லா நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் நினைத்தார்கள்.

- Advertisement -

முதல் நான்கு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் கடைசி 7 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் 24 விக்கட்டுகளை கைப்பற்றினார். அவரே அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராகவும் இந்த உலகக் கோப்பை தொடரில் வந்தார்.

இந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து பேசி உள்ள சமி கூறும் பொழுது “எங்களிடம் நிறைய ரன்கள் இல்லை. நாங்கள் 300 ரன்கள் எடுத்திருந்தால் மிக சுலபமாக அவர்களை தடுத்து இருப்போம். ஆனால் எந்த குறிப்பிட்ட விஷயத்தையும் குறை கூறுவது சரி இல்லை என்று நான் நினைக்கிறேன்.

நாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோம் என்று பார்ப்பது முக்கியம். நாங்கள் ஒரு யூனிட் ஆக வேலை செய்ய வேண்டியது அவசியம். நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன், நாங்கள் ரன்கள் எடுக்க தவறி விட்டோம்!” என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்!