நாளை நியூசிலாந்துக்கு எதிராக பிளேயிங் லெவன் இதுதான்! – ரோகித் சர்மா வெளிப்படையான அறிவிப்பு!

0
4326
Rohitsharma

2023 புதிய ஆண்டின் தொடக்கமாக இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடி இரண்டையும் இழந்து நாடு திரும்பி இருக்கிறது!

இந்த நிலையில் இதற்கு அடுத்து நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியாவுக்கு தற்போது சுற்றுப்பயணம் செய்திருக்கிறது!

- Advertisement -

நியூசிலாந்தின் இந்தச் சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி நாளை ஹைதராபாத் மைதானத்தில் துவங்க இருக்கிறது!

இந்தத் தொடருக்கான ஒருநாள் இந்திய அணியில் இடம் பெற்று இருந்த நடுவரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக விலகி உள்ளார். இவருக்குப் பதிலாக தற்பொழுது ரஜத் பட்டிதார் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்

இந்த நிலையில் நாளை நடைபெற இருக்கும் முதல் ஒருநாள் போட்டியில் அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்று ரோஹித் சர்மா சூசகமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ரோஹித் சர்மா கூறும் பொழுது ” இஷானை பொறுத்தவரை இந்த முறை அவர் நடு வரிசையில் பேட்டிங் செய்வார். பங்களாதேஷ் அணிக்கு எதிராக அவர் இரட்டை சதம் விளாசிய பிறகு இங்கும் அவர் ரன்கள் எடுப்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். டீம் பேலன்ஸில் நாங்கள் எதையும் சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை. நீங்கள் உங்களின் சிறந்த 11 பேரை கொண்ட அணியுடன் விளையாட விரும்புகிறீர்கள். இது எங்களுக்கு சவாலான விஷயம்தான். குறிப்பாக எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடங்கள். எதற்காகத்தான் நாங்கள் அணியில் பேட் செய்யக்கூடிய சர்துல் தாகூரை கொண்டு வந்து இருக்கிறோம். ஆனால் நடுவர் செயல் விக்கெட்டுகள் வேகமாக விழுந்தால் இது நமக்கு சவால் அளிக்கக்கூடிய ஒரு விஷயம்தான்” என்று தெரிவித்திருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” அதிர்ஷ்டவசமாக எங்களிடம் பேட்டிங் செய்யக்கூடிய அளவிலான சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களால் எங்களுக்கு பேட்டிங்கில் ஆழத்தை கொடுக்க முடியும். அதே சமயத்தில் தரமான மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களான சாகல் மற்றும் குல்தீப் இருவரையும் மறக்க முடியாது. கடைசியாக 11 பேர் கொண்ட அணிக்காக எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்து பார்க்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்!