“பைனலுக்கு நீங்க ஏற்கனவே பார்த்த இந்த ஆடுகளம்தான் தரப்போறாங்க!” – கம்மின்ஸ் வெளியிட்ட முக்கியத் தகவல்!

0
894
Cummins

உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற இருக்கிறது!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக அமையும்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி அடைந்த உலகக்கோப்பை தொடராக நடப்பு உலகக்கோப்பைத் தொடர் இருந்து வருகிறது.

இப்படி ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த தொடரில், தொடரை நடத்தும் நாட்டின் அணியும், உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச முறை கோப்பையை வென்ற அணியும் மோதிக்கொள்வது, போட்டி குறித்தான எதிர்பார்ப்பை அதிகரிப்பதோடு, போட்டியை சிறப்பான ஒன்றாகவும் மாற்றுகிறது.

எனவே இரு அணிகளும் நாளை எப்படியான திட்டத்துடனும் அணுகுமுறைகளும் போட்டியை எதிர்கொள்வார்கள் என்கின்ற ஆவல் ரசிகர்களிடையே பெரிய அளவில் இருந்து வருகிறது.

- Advertisement -

மேலும் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இறுதிப் போட்டிக்கு என்ன மாதிரியான ஆடுகளம் பயன்படுத்தப்படும் என்பது குறித்தும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பும் கேள்விகளும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் கூறும் பொழுது “ஆமாம் ஆடுகளம் குறித்து எதுவும் சொல்வது கடினம். ஆனால் இரு அணிகளுக்கும் ஒரே மாதிரியான ஆடுகளம்தான் தரப்பட போகிறது. இந்திய அணிக்கு சொந்த நாட்டு சாதகம் இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

நீங்கள் வாழ்நாள் முழுவதும் விளையாடு வரும் உங்களது சொந்த விக்கெட்டில் விளையாடுவது சாதகம்தான். ஆனால் நாங்களும் இங்கு கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். எனவே என்ன நடக்கிறது என்று நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

இறுதிப் போட்டிக்கு ஒரு முறை இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு பயன்படுத்தப்பட்டுள்ள ஆடுகளம் வழங்கப்படுகிறது. மும்பை வான்கடே மைதானம் போல இங்கும் டாஸ் ஒரு முக்கிய பங்கை கொண்டிருக்கும். நாங்கள் என்ன நிலைமையோ அதற்கு தகுந்தவாறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்த பார்ப்போம்!” என்று கூறியிருக்கிறார்!