சாம்சனுக்கு கொடுக்கிற வாய்ப்ப இந்த பையனுக்கு கொடுங்க.. இவன்தான் அடுத்த தோனி – முன்னாள் இந்திய வீரர் ஆதங்கம்!

0
20373
Samson

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 அணி ஏழு வருடங்களுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் டி20 கிரிக்கெட் தொடரை பறி கொடுத்திருக்கிறது!

இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் இறுதித் தொடர்பான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி மற்றும் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தோற்றத்தின் மூலம் தொடரை இரண்டுக்கு மூன்று என இழந்தது!

- Advertisement -

இந்தத் தொடரில் விக்கெட் கீப்பராக முதலில் வாய்ப்பு அளிக்கப்பட்ட இஷான் கிஷான் சரியாக விளையாடாத காரணத்தால் இரண்டு போட்டிகளுடன் நிறுத்தப்பட்டார். அவரது இடத்தில் ஜெய்ஸ்வால் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதே சமயத்தில் 5 போட்டிகளிலும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆன சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டது. நான்காவது போட்டியில் மட்டும் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் மீதி நான்கு போட்டிகளிலும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும் அவர் தனது திறமையை நிரூபிக்க தவறிவிட்டார். இந்தத் தொடரை இந்திய அணி இழப்பதற்கு இவரும் ஒரு முக்கியமான காரணமாக இருந்திருக்கிறார்.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்பகட்ட வெற்றிகரமான வீரரும், தற்போதைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை பயிற்சியாளருமான அபிஷேக் நாயர் கூறுகையில் “சாம்சன் வாய்ப்பை இழந்தாரா? என்று எனக்குத் தெரியவில்லை. அவர் சஞ்சு சாம்சன் என்பதால் மீண்டும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும். நீங்கள் அவரது இடத்தில் இருந்தால் அவர் ஆறாவது இடத்தில் விளையாடக்கூடிய பேட்ஸ்மேனா என்றுதான் கேட்பிர்கள்.

- Advertisement -

அவரால் இந்த இடத்தில் சரிவர விளையாட முடியவில்லை. அவருக்கு இது புதிய ரோலாக இருந்தது. அவர் மூன்று இன்னிங்ஸ்கலில் விளையாடி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவருக்கு ஒரு வேலை மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டால் ரன்கள் வரவில்லை என்றால் கேள்வி வரும். அவர் இந்த முறை ஐந்தாவது இடத்தில் இறங்கியும் ரன் வரவில்லை.

நீங்கள் அவரை பயன்படுத்த விரும்பினால் அவரை நம்பர் மூன்றில் இறக்கி விடுங்கள். ஏனென்றால் அதுதான் அவருக்கு மிகவும் பழக்கப்பட்ட இடம். அங்குதான் அவர் வெற்றி பெற்றார். இல்லை முடியாது என்றால் அவரை அணிக்கு தேர்வு செய்ய வேண்டாம்.

நீங்கள் அவரை ஐந்து இல்லை ஆறாம் இடத்தில் விளையாட வைப்பீர்கள் என்றால் அவருக்கு பதிலாக அந்த இடத்தில் சிறப்பாக விளையாடும் ரிங்கு சிங்கை விளையாட வையுங்கள். சாம்சனை மூன்றாவது இடத்தில் விளையாட வைத்தால் அவர் முதலில் பவர் பிளேவில் ரன்கள் எடுத்து பின்பு சுழற் பந்துவீச்சில் மெதுவாக ரன்கள் கொண்டு வருவார். அவருக்கு இது சரியான இடம் இல்லை என்று நான் நம்புகிறேன்.

ரிங்கு சிங் பினிஷிங் ரோலில் அற்புதமாக பொருந்தக்கூடியவர். அவர் பெரிய பேட்ஸ்மேன் இல்லை என்றாலும் அந்த வேலையை அவரால் மிகச் சரியாக செய்ய முடியும். அவரால் உள்ளே சென்று தொடர்ச்சியாக சிக்ஸர்கள் அடிக்க முடியும். அதை அவர் நமக்கு ஐபிஎல் தொடரில் செய்தும் காட்டி இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!