“சில வருஷங்களா நான் பார்க்கிற.. சுயநலமில்லாத இந்திய வீரர் இவர் மட்டும்தான்!” – சைமன் டால் அதிரடி கருத்து!

0
724
Rohit

இந்திய அணி தற்பொழுது தென் ஆப்பிரிக்க நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை முடித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்ட் போட்டியில் வருகின்ற டிசம்பர் 26 ஆம் தேதி விளையாட இருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி துவங்கி நடைபெறுகிறது.

- Advertisement -

முதல் இரண்டு தொடர்களுக்கும் கேப்டன்களாக சூரியகுமார் யாதவ் மற்றும் கேஎல்.ராகுல் ஆகியோர் இருந்து வந்த நிலையில், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாக திரும்புகிறார்.

இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்ததில் இதுவரை ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை கைப்பற்றியது கிடையாது. எனவே இந்த முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வரலாற்று மாற்றி எழுதுமா? என்கின்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது.

உலகக்கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு கேப்டன் ரோஹித் சர்மா, ரன் மெஷின் விராட் கோலி மற்றும் ஜஸ்ட்பிரித் பும்ரா மூவரும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புகிறார்கள். அந்த பாதிப்பில் இருந்து அவர்கள் முழுமையாக வெளிவர வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா பற்றி பேசி உள்ள நியூசிலாந்தின் சைமன் டால் கூறும்பொழுது “டெஸ்ட் தொடர் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தை கொஞ்சம் கட்டுப்படுத்துவதாக இருக்கும். கடந்த 10, 18 மாதங்களில் நான் ரோகித் சர்மாவை பார்த்ததில், அவர்தான் இந்தியாவின் மிகவும் தன்னலமற்ற கிரிக்கெட் வீரராக இருந்தார்.

அவர் தன் அணியின் வெற்றிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளார். அவர் இந்த அணியை உருவாக்கினார். அணியில் உள்ள மற்றவர் தங்களுடைய பாணியில் விளையாடுவதற்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்தார். குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இதைச் செய்தார்.

நடந்து முடிந்த உலகக் கோப்பையில் டாப் ஆர்டரில் அவர் அணிக்கு தேவையான வேகத்தை உருவாக்கினார். இது மிடில் ஆர்டரை அவர்களுடைய இயல்பில் விளையாட விட்டது. தற்பொழுது இதில் ஒரு சிறிய மாற்றம் நடக்கும். ஆனால் நான் அவர் விளையாடுவதை இப்பொழுதும் விரும்புகிறேன். ரோஹித் சர்மா தொடர்ந்து ஆக்ரோஷமாக இருக்க வேண்டும். இதை நாம் டெஸ்ட் போட்டியிலும் பார்ப்போம்!” என்று கூறி இருக்கிறார்!