“எங்க தோல்விக்கு இது மட்டும்தான் ஒரே காரணம்!” – ஆஸி கேப்டன் புலம்பல் பேச்சு!

0
19892
Wade

இந்திய அணி இன்று அதிரடியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை சூரியகுமார் தலைமையில் கைப்பற்றி அசத்தி இருக்கிறது.

இன்று பஞ்சாப் ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

இந்திய அணிக்கு ஜெயஸ்வால் 37, ருத்திராஜ் 32, ரிங்கு சிங் 46, ஜிதேஷ் சர்மா 35 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 174 ரன்கள் வந்தது.

இதற்கடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு மிக அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 31, மேத்யூ வேட் 36 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனை அடுத்து இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை வென்று இருந்த காரணத்தினால், தொடரையும் இந்திய அணி ஒரு போட்டி மீதம் வைத்து வென்று அசத்தியிருக்கிறது.

- Advertisement -

உள்நாட்டில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட்டு இந்திய அணி தோற்று உலகக் கோப்பையை இழந்த அடுத்த மூன்று நாட்களில் இந்த தொடர் ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வெற்றி இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் அவசியமாக இருந்தது.

தோல்விக்கு பின் ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் கூறும் பொழுது “நாங்கள் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களை சரியாக விளையாடவில்லை. நடுவில் சில விக்கட்டுகளை வேகமாக இழந்து விட்டோம்.

எங்கள் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் அதையே எங்களால் பேட்டிங்கில் திருப்பி செய்ய முடியவில்லை. எங்கள் தோல்விக்கு மிக முக்கிய ஒரே காரணமாக இது அமைந்தது.

டி20 உலக கோப்பை நெருங்கி வருகின்ற காரணத்தினால், ஏற்கனவே டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியா அணிக்கு விளையாட இருப்பவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதும், அணிக்குள் ஆழமாக இருப்பதும் மிகவும் முக்கியமானது!” என்று கூறியிருக்கிறார்!