எங்கள் தந்தையின் கனவு நினைவாகும் தருணம் இது ; ஒரு பாண்டியா இன்றைய போட்டியில் வெற்றி வெற்றி பெறுவது உறுதி- ஹர்திக் பாண்டியா உருக்கமான பேச்சு!

0
754
Ipl2023

இன்று விடுமுறை நாளில் ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன!

இந்தப் போட்டியில் குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆகவும், லக்னோ அணிக்கு அவரது அண்ணன் குர்னால் பாண்டியா கேப்டன் ஆகவும் இருந்து போட்டியைச் சந்திக்கிறார்கள். ஐபிஎல் வரலாற்றில் அண்ணன் தம்பி கேப்டனாக மோதிக் கொள்வது இதுவே முதல்முறை!

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் அண்ணன் குர்னால் பாண்டியா வென்று முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இந்த போட்டிக்கான டாசின் பொழுது இருவரும் உருக்கமான தமது பேச்சை வெளிப்படுத்தினார்கள்.

தம்பி ஹர்திக் பாண்டியா பேசும்பொழுது
“இது மிகவும் உணர்ச்சிகரமான நாள். எங்கள் அப்பா இருந்திருந்தால் பெருமையாக இருந்திருப்பார். அவர் இதைப் பற்றி கனவு கண்டார். இது முதல்முறையாக நடக்கிறது. இரண்டு அணிகளில் யார் வெற்றி பெறுவார் என்று தெரியாத நிலையில் ஒரு பாண்டியா வெற்றி பெறுவார் என்பது உறுதி!

நாங்கள் டாஸ் வென்று இருந்தால் முதலில் பேட்டிங்தான் செய்து இருப்போம். நாங்கள் முடிவைப் பற்றி கவலைப்படாமல் எங்களை வெளிப்படுத்துவதை பற்றி யோசிக்கிறோம். லிட்டில் தமது அணியான அயர்லாந்துக்கு விளையாட சென்று இருப்பதால் அல்ஜாரி ஜோசப் இடம் பெறுகிறார்!” என்று கூறினார்.

- Advertisement -

அண்ணன் குர்னால் பாண்டியா பேசும்பொழுது ” இது எங்களுக்கு ஒரு கனவு நனவாகும் தருணம் ஆகும். நாங்கள் களத்திற்குள் சென்றவுடன் அது நடக்கும்!” என்று கூறியிருக்கிறார்!