இந்திய கிரிக்கெட்

148 வருடத்தில் முதல் முறை.. இந்தியா இங்கிலாந்து போட்டிகள் நடந்த ஆச்சரிய நிகழ்வு.. ஆனால் சோகம்

இன்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஆச்சரிய சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. இதன் முதல் டெஸ்ட் போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

மிடில் ஆர்டரில் இரண்டு சதங்கள்

இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து என மூன்று நாடுகளிலும் தான் முதலில் விளையாடிய டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து இந்திய அணியின் மிடில் ஆர்டரில் நான்காவது இடத்தில் வந்த கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்து 147 ரன்கள் எடுத்தார். ஐந்தாவது இடத்தில் வந்த ரிஷப் பண்ட் சதம் அடித்து 134 ரன்கள் அடித்தார். இந்திய டாப் 6ல் மூன்று பேர் சதம் அடித்தார்கள்.

- Advertisement -

148 வருடத்தில் முதல் முறை

அதே சமயத்தில் இந்திய டாப் 6ல் அறிமுக போட்டியில் களமிறங்கிய சாய் சுதர்சன் ரன்கள் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இதே போல் எட்டு வருடத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய கருண் நாயர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.

இதையும் படிங்க : நான் கவனிச்சேன்.. ரிஷப் கில் ஹிந்தியில சத்தமா பேசினாங்க.. அவர் வேணும்னே கீழ விழறதில்ல – சச்சின் பாராட்டு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் விளையாடத் தொடங்கி 148 வருட வரலாற்றில் இதுவரையில் ஒரு அணியில் டாப் 6ல் மூன்று பேர் சதம் அடிக்க அதில் இரண்டு பேர் டக் அவுட் ஆன நிகழ்வு முதல் முறையாக நடைபெற்றிருக்கிறது. இது அரிய நிகழ்வாக இருந்த போதும் இந்திய அணிக்கு சோகமான விஷயமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by