“இவரே பிரகாசமான எதிர்காலம்.. இந்த இந்திய வீரரை சொல்ல வார்த்தை இல்ல!” – கெயில் பாராட்டு!

0
276
Gayle

தென் ஆப்பிரிக்கா மண்ணில் இன்று சூரியகுமார் தலைமையில் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாட இருக்கிறது.

சூரியகுமார் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா மட்டுமே மிகப்பெரிய அனுபவம் கொண்ட மூத்த வீரராக இருக்கிறார். மற்றபடி ஜடேஜாவுக்கு அடுத்து குல்தீப் இருக்கிறார்.

- Advertisement -

இந்த அணியில் மற்ற எல்லோருமே இளம் வீரர்களாக இருக்கிறார்கள். இந்த அணிக்கு பெரிய அனுபவம் இல்லை என்றாலும் கூட, ஐபிஎல் விளையாடி இருப்பது இவர்களுக்கு பெரிய அனுபவமாக அமையும்.

ஏறக்குறைய இதே அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை நான்குக்கு ஒன்று என அபாரமான முறையில் கைப்பற்றி அசத்தி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் ஐபிஎல் தொடர் முடிந்து ஒருவேளை ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விலக்கப்பட்டால், தற்போது சூரியகுமார் தலைமையில் விளையாடும் இளம் வீரர்கள்தான் விளையாடுவார்கள்.

- Advertisement -

எனவே டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் விதத்தில் இந்தியா அணிக்கு நடப்பு தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியிருக்கிறது. எனவே வாய்ப்பு கிடைக்கும் வீரர்கள் இந்த தொடரை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

தற்போது இந்திய டி20 அணியை வழிநடத்தும் கேப்டன் சூரியகுமார் பற்றி அதிரடி வீரர் கிரீஸ் கெயில் கூறும்பொழுது “அவரைப் பற்றி கூற எனக்கு வார்த்தைகளே கிடையாது. மைதானம் முழுவதிலும் அவருடைய ஷாட்கள் இருக்கிறது. ஈர்க்கக்கூடிய ஸ்டிரைக்ரேட் கொண்ட ஒரு அற்புதமான வீரர் அவர். நாம் முன்பே கூறியிருப்பது போல அவர் ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்காக விதிக்கப்பட்டவர்.

அவருடைய திறமையைப் பற்றி வார்த்தைகளில் சொல்ல முடியாது. அவர் முழுமையான 360 டிகிரி வீரராக இருக்கிறார். அவருக்கு எதிராக எப்படி பந்து வீசுவது என்று பந்துவீச்சாளர்கள் திணறுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

சூரிய குமாருக்கு பந்துவீச்சாளர்கள் வியூகத்தை அமைப்பது மிகவும் கடினமான ஒன்று. அவருக்கு எதிராக எந்த எந்த பகுதிகளை குறி வைப்பது என்று முடிவு செய்வது கடினம். நான் முன்பே குறிப்பிட்டது போல அவர் விதிவிலக்கான ஒரு வீரர்!” என்று கூறி இருக்கிறார்!