இது பழைய பாகிஸ்தான் கிடையாது.. ஆனாலும் கூட.. – மீண்டும் களம் இறங்கிய சோயப் அக்தர்!

0
893
Akthar

இன்று 16ஆவது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இலங்கை கண்டி மைதானத்தில் நடக்க இருக்கிறது!

நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கு மழை அச்சுறுத்தல் மிக அதிகமாக இருக்கிறது. கிரிக்கெட் உலகத்தில் தற்போது மழையால் இந்த போட்டி நடைபெறுமா? நடைபெறாதா? என்பது சமூக வலைதளத்தில் பெரிய விவாதமாக சென்று கொண்டு இருக்கிறது.

- Advertisement -

இதற்கு நடுவே இரு நாடுகளை சேர்ந்த முன்னாள் வீரர்கள் இந்தப் போட்டி குறித்து தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். எப்படிப்பட்ட பிளேயிங் லெவனை களம் இறக்க வேண்டும்?யார் தாக்கம் தரக்கூடிய வீரர்களாக இருப்பார்கள்? யார் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது? என்பது குறித்து பேசி வருகிறார்கள்.

இந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிவேக பந்துவீச்சாளர் சோயப் அக்தர் இந்தியா பாகிஸ்தான் இரு அணிகள் குறித்தும், போட்டியில் யாருக்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறித்தும் தனது பார்வையை முன் வைத்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“பாபரும் அவரது அணியும் மெச்சூர்டானவர்கள். இந்தியாவுக்கு எதிராக முன்பு இதே போல உயர் அழுத்த போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டிருக்கிறார்கள். எனவே இப்பொழுது அவர்கள் அதிக அழுத்தத்தில் இருக்க மாட்டார்கள்.

- Advertisement -

பாகிஸ்தான் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்தால் இந்தியாவை அவர்கள் சுலபமாக வெல்வதற்கு வழிவகுக்கும். அதே சமயத்தில் டாசை இழந்தால் பாகிஸ்தானுக்கு பிரச்சனை. ஏனென்றால் இரவில் மின்விளக்குகளின் கீழ் பந்து பெரிதாக ஏதும் நகரவில்லை.

இரு அணிகளுக்கும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. பும்ரா, சமி, சிராஜ் 3 பேரும் விளையாட வேண்டும். குல்தீப் விளையாட வேண்டும். விராட் கோலி நான்கில் விளையாட வேண்டுமா? இசான் கிஷான் ஐந்தில் விளையாட வேண்டுமா? என்கின்ற விவாதங்கள் சென்று கொண்டிருக்கிறது.

நான் இதுகுறித்து என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் பாகிஸ்தான் அணி பந்தோடு நல்ல பேட்டிங்கும் கொண்டுள்ள செட்டிலான அணியாக இருக்கிறது. கடந்த காலத்தைப் போல மிகச்சிறந்த பேட்டிங் லைன் அப் கொண்டு இருக்காவிட்டாலும் சிறந்த ஒரு அணி. துணை கண்ட நிலவரங்களில் இந்த இரண்டு அணிகளுமே சம பலமானவை!” என்று கூறி இருக்கிறார்!